ENTERTAINMENT

Bigg Boss Tamil | ‘ப்ராங்க்’ காமெடி செய்த ஆண்கள் அணி... விளாசும் ரசிகர்கள்... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பிக்பாஸ் எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. தினம் ஒரு காட்சியாக பிக்பாஸ் சீசன் 8 கவனம் ஈர்த்துவருகிறது. அதன்படி, பிக் பாஸ் வீட்டில் 3வது நாளில் நடந்த சம்பவங்கள் தான் வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாப்பிக். ‘இதெல்லாம் ஒரு டாஸ்க்கா’ என பிக்பாஸை நினைத்து நொந்துகொள்கிறார்கள் ரசிகர்கள். சம்பவம் இதுதான்… நேற்றைய ப்ரோமோவில் ஆண்கள் அணியில் ரவீந்தரும், ரஞ்சித்தும் உக்கிரத்துடன் மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த ப்ரோமோ ரசிகர்களின் பல்ஸை எக்கசக்கமாக எகிற வைத்தது. ஆனால் நேற்று வெளியான எபிசோடு, அதை அப்படியே உப்பு சப்பில்லாததது போல் மாற்றியது. ரவீந்தர் ‘ப்ராங்க்’ என்கிற பெயரில் பெண்கள் அணியின் கவனத்தை ஈர்க்க, சண்டை போடும் ஐடியாவை கொடுத்தார். ‘என்னை டி போட்டு கூப்பிடாதே’ என்று பவித்ரா போட்ட சண்டையை, அப்படியே தொடரும் விதமாக ரவீந்தரும், ரஞ்சித்தும் சண்டையை தொடங்கினர். ஒருவரையொருவர் ஆக்ரோஷமாகப் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். ‘கைய நீட்டி பேசாத.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்’ என்று ரஞ்சித் எகிற, பதற்றம் தொற்றிக் கொண்டது. கூடுதல் பில்டப்பிற்காக, சும்மா இருந்த அருண் பிரசாத்தை இழுத்து கீழே தள்ளினார் ரஞ்சித். இந்த காமெடி சண்டையை உண்மை என நம்பியது பெண்கள் அணி. மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, சண்டையை தடுக்க முயன்றார் ஜாக்குலின். ஒருவழியாக இருவரையும் சமாதானப்படுத்தி ‘ஸாரி கேளுங்க..’ என சொல்ல முற்பட்டபோதுதான் இது ‘ப்ராங்க்’ எனத் தெரிந்து கொண்டார் ஜாக்குலின். இதன்பின் அவர் உக்கிரத்துக்குச் சென்றார். ‘இந்த சண்டையைப் பார்த்து பதறிட்டேன் தெரியுமா. சண்டையை விலக்கப் போய் எனக்கு கை வலிக்குது. சண்டையை விலக்க வந்த நான் என்ன முட்டாளா?’ என்று கூறியவர், வழக்கம் போல் அழுதுவிட்டார். இந்தக் காட்சிகளை தான் தற்போது இணையவாசிகள் ஹாட் டாப்பிக்காக பேசிவருகின்றனர். ‘இவ்வளவு மோசமான ப்ராங்க், தேவையில்லாத ஒரு ஆணி’ என்கிற ரீதியில் விமர்சித்து வருகின்றனர். Also Read | Vettiyan Movie Review : ரஜினியின் வேட்டையன் படம் எப்படி இருக்கு? ஃபேன்ஸ் ரிவ்யூ இதோ ஏற்கனவே இந்த சண்டைக்கு சற்றுநேரத்துக்கு முன்புதான் டாஸ்க் என்கிற பெயரில், பிக்பாஸ் கொடுத்த உப்பு சப்பில்லாத போட்டி…புள்ளி வைத்து கோலம் போடும் போட்டி, குளிர்பானத்தை ஒரே மடக்கில் குடிக்கும் போட்டி, பொம்மைக்கு டயப்பர் மாட்டி விடும் போட்டியை எல்லாம் வாய்த்து என்ன பிக்பாஸ் இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என்று ட்விட்டரில் வெளுத்துக் கொண்டிருந்தனர் ரசிர்கள். இந்தநிலையில்தான் போதாக்குறைக்கு ‘ப்ராங்க்’ காமெடி வேறு நடக்க, பிக்பாஸ் சீசன் எட்டை ரசிகர்கள் வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.