ENTERTAINMENT

தெறி பட ஸ்டைலா..? தளபதி 69 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்.. இணையத்தில் கசிந்த தகவல்!

நடிகர் விஜய்யின் கடைசி படத்தில் அவர் நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில் சினிமாவை விட்டு முற்றிலுமாக விளக்கவுள்ளார். இதையடுத்து சினிமாவில் விஜய் கடைசியாக நடிக்கும் படம் ‘தளபதி 69’படத்தை எச்.வினோத் இயக்குகிறார். சில நாட்களுக்கு முன் விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தின் பூஜையும், விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாட்டு பூமி பூஜையும் ஒரே நாள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் , அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் படத்திற்கு பூஜை போடப்பட்டு படம் தொடர்பான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, தளபதி 69 படத்தில் காவல்துறை முன்னாள் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாபி தியோல், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள இப்படம் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெறி படத்திலும் முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடிகர் விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / தெறி பட ஸ்டைலா..? தளபதி 69 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்.. இணையத்தில் கசிந்த தகவல்! தெறி பட ஸ்டைலா..? தளபதி 69 படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்.. இணையத்தில் கசிந்த தகவல்! எச்.வினோத் இயக்கி வரும் விஜயின் கடைசி படமான தளபதி 69ல் விஜயின் கதாபாத்திரம் இதுதான் என்ற தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 7:05 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் நடிகர் விஜய்யின் கடைசி படத்தில் அவர் நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில் சினிமாவை விட்டு முற்றிலுமாக விளக்கவுள்ளார். இதையடுத்து சினிமாவில் விஜய் கடைசியாக நடிக்கும் படம் ‘தளபதி 69’படத்தை எச்.வினோத் இயக்குகிறார். சில நாட்களுக்கு முன் விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தின் பூஜையும், விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாட்டு பூமி பூஜையும் ஒரே நாள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் , அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் படத்திற்கு பூஜை போடப்பட்டு படம் தொடர்பான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, தளபதி 69 படத்தில் காவல்துறை முன்னாள் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாபி தியோல், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள இப்படம் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெறி படத்திலும் முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடிகர் விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vijay , H Vinoth , Thalapathy 69 , Thalapathy 69 update First Published : October 16, 2024, 7:05 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.