ENTERTAINMENT

Vettiyan Movie Review : ரஜினியின் வேட்டையன் படம் எப்படி இருக்கு? ஃபேன்ஸ் ரிவ்யூ இதோ

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் ரஜினி நடிப்பில் இன்று ரிலீஸாகியுள்ள வேட்டையன் திரைப்படம் குறித்து படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இந்த படம் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கேரக்டரில் ரஜினிகாந்த் வழக்கம்போல மாஸ்ஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் பகத் பாசிலுடைய கேரக்டர் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. சிலர் படத்தின் முதல் பாதி மிக நன்றாக இருப்பதாகவும், 2 ஆவது பாதி சராசரிக்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. Her Review ❤️☺️ #Vettaiyan The WINNER 🏆🥇 #VettaiyanReviews | #VettaiyanFdfs pic.twitter.com/sKAAGNQDg8 Positive Reviews Pouring Everywhere 🔥🔥🔥🔥🔥 Edutu Vainga da Anta 500Cr ah 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 #Thalaivar #VettaiyanFDFS #VettaiyanBlockbuster #Rajinikanth #Coolie pic.twitter.com/QNFqsDkniZ க்ரைம் த்ரில்லர் ஜேனரில் வெளிவந்துள்ள வேட்டையன் படத்தில் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் வரும் காட்சிகள் ரசிகர்கள் அதிகம் கவர்ந்துள்ளது. #Vettaiyan - @tjgnan is the true hero . Takes guts to convey such a message ! சமூக வலைதளங்களில் வேட்டையன் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களே அதிகம் வந்துள்ளன. வழக்கமான ரஜினி படங்களைப் போல் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல், வேட்டையன் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். #Vettaiyan Second Half Review 🍿 - The Investigation angle continues with Hero vs Villain play in the second half with largely engaging Screenplay..⭐ - Superstar #Rajinikanth 's role blended superbly with the story and Shines like a Star in his Mass moments..🔥 - #Anirudh 's… சமூக வலைதளங்களில் வெளியான ரசிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வேட்டையன் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.