ENTERTAINMENT

வேட்டையன் படம் ரிலீஸ் அதுமா இப்படியா... இந்த தீவிர ரசிகர் செய்த செயல் தான் ட்ரெண்டிங்...

ரஜினி ரசிகர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை என்றாலே புதுப்படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. பண்டிகைக் காலங்கள் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் திரையரங்குகள் திருவிழா போலக் காட்சியளிக்கும். இந்நிலையில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இதுபோல் முதல் நாளில் படம் பார்ப்பதற்காக ரசிகர்கள் அலுவலகத்திற்கு லீவ் போட்டுவிட்டு குழுவாகத் திரையரங்கிற்குச் செல்வார்கள். இந்நிலையில் நாளை ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியாகும் நிலையில் கோவையில் உள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வேட்டையன் பட டிக்கெட், அதற்கான பிரத்தியேக டிஷர்ட் உள்ளிட்டவற்றை வழங்கியதுடன் நாளை படத்திற்குச் செல்வதற்காக விடுமுறையும் வழங்கியுள்ளது. இதையும் படிங்க: புகை புடிப்பதை நிறுத்தனுமா…? செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு பாருங்க இதுகுறித்து ரஜினி ரசிகரும், நிறுவனத் தலைவருமான ராம் நிவாஸ் கூறுகையில், “நான் சின்ன குழந்தையிலிருந்து ரஜினி ரசிகராக இருக்கிறேன். எனக்கு ரொம்ப சந்தேகமா கூட இருக்கும் என் மேல, நான் பிறந்ததற்கு அப்புறம் ரஜினி ரசிகர் ஆனேனா, இல்லை ரஜினி ரசிகர் ஆவதற்காகவே பிறந்தேனா என்று எனக்கே கேள்விக்குறியாக இருக்கும். ஏன் அவ்வளவு தீவிர ரசிகரா இருக்கிறேன் என்று 36 வருடம் ஆக தேடிக் கொண்டிருக்கிறேன். அதற்கான விடை எனக்குக் கிடைக்கவில்லை. ரஜினி என்றாலே ஒரு எனர்ஜி, ரஜினி என்றால் ஒரு பிம்பம் கிடையாது. ரஜினி என்றால் பஞ்சபூதங்கள் மாதிரி எல்லோர் உள்ளேயும் இருக்கும். எல்லோர் உள்ளேயும் எல்லா மனுஷன் உள்ளேயும் ரஜினியை உணர்கிறதால் தான் 50 வருடங்களாகியும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. சாதாரண மனிதர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறப்போ. இவ்வளவு பிடித்த ரஜினிகாந்த் மேல இவ்வளவு ஈர்ப்பு இருக்கும். ரஜினியை விட சிவாஜி ராவ் என்கிற மனிதனை ரொம்ப பிடிக்கும். ரஜினிகாந்த் என்கிற ஹீரோவை நாம் எப்படி பார்க்கிறோமோ. சிவாஜி ராவ் என்கிற மனுஷனும் ரஜினிகாந்த் அப்படித்தான் பார்க்கிறார். தலைக்கனம் ஏறாத அந்த குணம், எவ்வளவு வசதி இருந்தும், இவ்வளவு செல்வாக்கு இருந்தும் ஒரு அடி தள்ளி வைத்து பார்க்கிற அந்த குணம் இது எல்லாம் சின்ன வயசுல இருந்தே எனக்கு பிடிக்கும். உதவி செய்வது, நேர்மையாக இருப்பது, நண்பர்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பது, கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்ப்பது இது எல்லாமே அவர்கிட்ட இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள். இதையும் படிங்க: Vettaiyan: ரஜினி படத்துக்கு லீவ்.. அண்ணாமலை பட பாணியில் சபதத்தை நிறைவேற்றிய தொழிலதிபர்! சின்ன வயசிலிருந்து ரொம்ப புடிச்சதுனால என்னுடைய எல்லா ஆக்டிவிட்டிளையும் அவர் இருப்பார். உதாரணத்திற்கு அரசியலுக்குச் சொன்னோம் என்றால் அரசியலைப் பற்றி அவ்வளவு தெளிவு கிடையாது. 2017 டிசம்பர் 31ஆம் தேதி அவர் அரசியலுக்கு வரேன்னு சொன்னப்போ. 16 - 17 வருடங்களாகச் செய்த தொழிலைத் தூக்கி கொடுத்துவிட்டு தலைவருக்காக வந்தோம். பின்னர் எனக்கு அரசியல் வேண்டாம் என்று சொன்னார். இதனால் 2019 டிசம்பர் 27 அன்னைக்கு எனக்குள்ள இருந்த ஒரே கேள்வி அரசியலைத் தொடர வேண்டுமா என்று ரொம்ப யோசித்ததில் அரசியலுக்காக ரஜினி கிட்ட வரல ரஜினிக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அரசியலே வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு அவரே வேண்டாம் என்று சொல்லிய நிலையில், திரும்பவும் தொழிலை ஆரம்பித்து ஒன்று இருக்கு நாலு மடங்கு ஆரம்பித்தோம். விட்டதையும், தொலைத்ததையும் சேர்ந்து பிடித்து விட்டு உடனடியா தலைவர் சொல்ற மாதிரி நான் யானை இல்லை குதிரை என்று டப் என்று இரண்டு வருடத்தில் மூன்று வருடத்தில் தொலைத்தது திரும்ப பிடித்து விட்டு. இப்படி பிடித்த பிறகு எனக்கு ஒரு ஆசை வந்தது. இதையும் படிங்க: கண்களைக் கவரும் காட்டேரி… அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கு… ரஜினி படம் ரிலீஸ் ரஜினி படம் என்றாலே கொண்டாட்டம் தானே. தலைவர் படத்தை என் கூட வேலை செய்ற அனைவரையும் கூட்டிக்கொண்டு பார்க்க வேண்டும் என்று கேட்டபோது கம்பெனியில் மத்த பார்ட்னர்களுக்கு உடன்பாடு இல்லை, அவர்களைத் தப்பு சொல்வதற்கு இல்லை அவர்களுக்கு விருப்பமில்லை. எனக்குள்ள இருந்த ஆர்வம் இது பண்ணனும் என்று சம்பாதித்த காசை நல்ல சேவை செய்யணும், வருமானம் தரக்கூடிய தொழில்கள் இருக்கிறது. நான் சந்தோஷமாக இருக்கிறேன், வேணுங்கிற அளவிற்கு வருமானம் இருக்கு. மன திருப்தியுடன் எல்லோருக்கும் உதவி பண்ணுவதற்கு என்று ஒரு கம்பெனி வைக்கணும் அது தலைவர் பேரு வைக்கணும் என்ற ஆசை தலைவர் பேரில் ஒரு அனாதை ஆசிரமம் வைக்க வேண்டும். ஒரு சேவை செய்யணும் என்று நினைக்கும் பொழுது தலைவர் பேரிலே ஒரு கம்பெனி வைத்து வருவதையே சேவை செய்யலாம் என்ற நோக்கத்தில் ஆரம்பித்தது தான் ரேணுகா இண்டஸ்ட்ரீஸ் சுருக்கி கூப்பிட்டால் R.K அதை விவரித்தால் ரஜினிகாந்த். எல்லாரும் தலைவர் படத்தை கொண்டாடணும், தலைவர் படத்திற்கு யூனிஃபார்மாக ஒரே டீ சர்ட் போடணும், நாளை படத்தைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு போய் கும்பிடனும். கம்பெனியில் நான் மட்டும் செல்வதென்று இல்லாமல் எல்லாரும் செல்ல வேண்டுமென்று நினைத்தேன். ரஜினி என்றாலே கொண்டாட்டம் தான். ஆகையால் வேட்டையன் படம் வருகிற நிலையில் 100, 200 பேருக்கு ஆவது டீ சர்ட் அடித்து கொடுத்துவிட்டு எல்லோருக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்துட்டு, கூட வேலை செய்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் ஊரில் இருக்கும் நண்பர்கள் திருவிழாவிற்கு அழைப்பது போல் ஊரில் இருப்பவர்கள் எல்லாம் வாருங்கள் என்று சொல்லி அழைத்திருக்கிறேன். இதையும் படிங்க: பாரா பவர் லிப்டிங்கில் தேசிய அளவில் சாதனை… இவர் வெற்றியின் ரகசியம் தெரியுமா… அதுமட்டுமில்லாமல் இன்று காலை ஸ்ரீலங்காவில் இருக்கக்கூடிய நண்பர்களுக்கு அனைவருக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளேன். ஊரில் திருவிழா என்றால் எப்படி கொண்டாடுவோமோ அதே போன்று தலைவர் படத்தை அப்படித்தான் கொண்டாடப் போகிறோம். இந்த படத்திற்கும் நிறைய ஏற்பாடுகள் செய்து இருக்கிறோம், நிறைய பேருக்கு தர்மம் செய்வதையும் திட்டமிட்டு இருக்கிறோம். எங்கள் ஊர் உடுமலைப்பேட்டையில் இருக்கக்கூடிய என்னுடைய நண்பர்கள் இடம் எல்லா வருடமும் நல்ல விஷயங்கள் செய்வது போன்று இந்த வருடமும் திட்டம் போட்டு இருக்கிறோம். அக்டோபர் 10 விட எங்கள் மனதிற்கு மிக நெருங்கின நாள் டிசம்பர் 12 அதற்கு வருடா வருடம் செய்வோம் இந்த வருடமும் நல்லா பிளான் பண்ணி இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். இவர் கம்பெனியில் வேலை செய்யும் வெங்கடேஷ் கூறுகையில், “நான் வெங்கடேஷ், நான் ராம்நிவாஸ் உடைய கம்பெனியில் 15 முதல் 20 வருட அசோசியேட்டட் ஆக வருகிறேன். பேசிக்கலி தலைவர் ஃபேன் தான் எல்லாரும். தலைவர் படம் என்றால் எல்லாரும் முட்டி மோதி முதல் நாள் முதல் சோ பார்த்து விடுவோம். இதையும் படிங்க: நேந்திரன் வாழையில் மகசூல் பெருக இது தான் வழி… விவசாயி சொல்லும் சக்சஸ் ஃபார்முலா… இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் நாளைக்கு தலைவர் படம் ரிலீஸ்க்கு கம்பெனியில் லீவு கொடுத்து இருக்கிறார்கள். டிக்கெட் எல்லாம் ஸ்பான்சர் பண்ணி இருக்காங்க. சம்பளத்துடன் லீவு கொடுத்து இருக்கிறார்கள், சரியான சந்தோசம். நாளைக்கு தலைவர் படம் அட்டகாசம் தான்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.