ENTERTAINMENT

"விஜயின் அரசியல் எண்ணம் நிறைவேற பிரார்த்தனை செய்வேன்" - நடிகர் லாரன்ஸ்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து விரைவில் முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ளார். இதனால் தளபதி 69 படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள விஜய், சில நாட்களுக்கு முன் தவெக கட்சி கொடி மற்றும் கொடி பாடலை கட்சி தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய் பெற்றோர் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறகொடியில் இரு பக்கமும் போர் யானைகள் இருக்க நடுவே தாழம்பூவுடன் இருக்கும் தவெக கட்சியின் கொடி பலரின் கவனத்தை பெற்றுள்ளது. விஜயின் இந்த அரசியல் நகர்வு சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், தனது குடும்பத்தினரோடு திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது சகோதரர் எல்வின் நடித்துள்ள புல்லட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாலும், தனது மாற்றம் சமூக சேவை பணிகள் நல்ல முறையில் நடைபெறுவதை ஒட்டியும் இறைவனுக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். இதையும் படிங்க: அனைத்து நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்பவர்களா? - நடிகை பார்வதி ஆதங்கம்! மேலும், நடிகர் விஜயின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறிய லாரன்ஸ், அவரது எண்ணங்கள் நிறைவேற பிரார்த்திப்பதாக தெரிவித்தார், புறப்படும் முன் அங்கிருந்த ரசிகர்களுடன் ராகவா லாரன்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / "விஜயின் அரசியல் எண்ணம் நிறைவேற பிரார்த்தனை செய்வேன்" - நடிகர் லாரன்ஸ் "விஜயின் அரசியல் எண்ணம் நிறைவேற பிரார்த்தனை செய்வேன்" - நடிகர் லாரன்ஸ் நடிகர் விஜய் அரசியலில் நினைத்தது எல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்தனை செய்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 7:36 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து விரைவில் முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ளார். இதனால் தளபதி 69 படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள விஜய், சில நாட்களுக்கு முன் தவெக கட்சி கொடி மற்றும் கொடி பாடலை கட்சி தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய் பெற்றோர் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விளம்பரம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறகொடியில் இரு பக்கமும் போர் யானைகள் இருக்க நடுவே தாழம்பூவுடன் இருக்கும் தவெக கட்சியின் கொடி பலரின் கவனத்தை பெற்றுள்ளது. விஜயின் இந்த அரசியல் நகர்வு சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், தனது குடும்பத்தினரோடு திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது சகோதரர் எல்வின் நடித்துள்ள புல்லட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாலும், தனது மாற்றம் சமூக சேவை பணிகள் நல்ல முறையில் நடைபெறுவதை ஒட்டியும் இறைவனுக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். இதையும் படிங்க: அனைத்து நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்பவர்களா? - நடிகை பார்வதி ஆதங்கம்! விளம்பரம் மேலும், நடிகர் விஜயின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறிய லாரன்ஸ், அவரது எண்ணங்கள் நிறைவேற பிரார்த்திப்பதாக தெரிவித்தார், புறப்படும் முன் அங்கிருந்த ரசிகர்களுடன் ராகவா லாரன்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Raghava lawrence , Actor Vijay , tvk First Published : August 25, 2024, 7:36 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.