ENTERTAINMENT

Independence Day 2024 : சுதந்திர தினத்தன்று தேசப்பற்றை தூண்டும் தேச பக்தி பாடல்களின் ப்ளே லிஸ்ட் இதோ..!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், கேட்டாலே தேசப்பற்றை தூண்டும் பாடல்களின் லிஸ்ட் இதோ.. இந்தியன் – கப்பலேறிப் போயாச்சு… வாலியின் வரிகளில் எஸ்.பி.பி. – பி.சுசீலா பாடிய இந்த பாடல் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாக்கப்பட்டது. நாட்டுப்பற்று, வீரம், காதல் என அனைத்து உணர்வுகளையும் ஒரே பாடலில் வாலி உள்ளடக்கியிருப்பார். இதற்கு ரகுமானின் மெட்டும், பின்னணி இசையும் இந்த பாடலை எவர் கிரீன்ஆக்கிவிட்டது. இந்திரா – இனி அச்சம் அச்சம் இல்லை ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ், அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பாடியிருப்பார்கள். 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றாக இது அமைந்தது. பெரும்பாலான சுதந்திர தின நிகழ்ச்சிகளில் இந்த பாடல் ஒலித்திருக்கும். இதையும் படிக்க | ஹிட்டா ? நெல்சனுக்கு கம்பேக்கா ? ‘ஜெயிலர்’ படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் ஜெய் ஹிந்த் – தாயின் மணிக்கொடி வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பியின் கர்ஜனையில் உருவான பாடல். இதுவும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட். அர்ஜுனின் நடிப்பும், வித்யாசாகரின் பின்னணி இசையும், எஸ்பிபியின் குரலும் இந்தப் பாடலை நெருப்பாக மாற்றின. 90 ஸ் - களில் இந்தப் பாடல் இல்லாமல் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடப்பது அரிது. இதையும் படிக்க | ஜெயிலர் விமர்சனம் என்ன? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் முதல் தியேட்டர் வரை தெறிக்கும் ரிவியூ! வந்தே மாதரம் – ஏ.ஆர்.ரகுமான் ஆல்பம் இசைப்புயல் இந்த பாடலை ஆல்பமாக வெளியிட்டார். பெரும்பாலான இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் பாடல், நாட்டுப் பற்றை மக்கள் மனதில் குறிப்பாக இளைஞர்களிடத்தில் தட்டி எழுப்பியது. ரகுமானின் மாஸ்டர் பீஸ்களில் இதுவும் ஒன்று. இதையும் படிக்க| ஜெயிலர் படம் நறுக் சம்பவமா? சொதப்பல் இருக்கா? நடுநிலையான நச் விமர்சனம் ஆர்.ஆர்.ஆர். – கோலே… படத்தில் க்ளைமேக்ஸ் பாடலாக கோலே பாடல் உருவாக்கப்பட்டிருக்கும். சுதந்திரத்திற்கு போராடியவர்களில் முக்கியமானவர்களை நினைவுபடுத்தும் பாடலாக கோலே அமைந்திருக்கும். ரோஜா – தமிழா தமிழா வைரமுத்து வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹரிஹரன் பாடிய பாடல். சுதந்திர தின எவர்க்ரீன் பாடல்களில் இதுவும் இடம்பெற்றிருக்கும் நாட்டுப் பற்றை உணர்த்தும் பல பாடல்கள் வெளிவந்தாலும் இங்கு குறிப்பிடப்பட்ட பாடல்கள் ரசிகர்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.