ENTERTAINMENT

THE GOAT தமிழ் ட்ரெய்லரில் மட்டும் இடம்பெறாத காட்சி… இந்தி, தெலுங்கு ட்ரெயிலரில் இதை கவனிச்சீங்களா?

ஜெயராம் - விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய்யின் தி கோட் படத்துடைய ட்ரெய்லர் இன்று வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் ட்ரெய்லரில் இடம்பெறாத ஒரு காட்சி மற்ற மொழி ட்ரெய்லர்களில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் கவனம் பெறுகின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் விஜய் தி கோட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஒய்.ஜி. மகேந்திரன், யோகி பாபு, மோகன் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 6000 ஸ்கிரீன்களில் தி கோட் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்துடைய ட்ரெய்லர் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். தி கோட் படத்துடைய பாடல்கள் ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தாத நிலையில் ட்ரெய்லர் பின்னணி இசை நன்றாக உள்ளதென ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழில் வெளியான ட்ரெய்லரில் “மருதமலை மாமணியே முருகையா..” என்ற பாடலை விஜய் பாடியவாறு காட்சிகள் நிறைவு பெறுகின்றன. இந்த பாடலை கில்லி படத்தில் விஜய் ஒரு காட்சியில் பாடி இருப்பார். அதனை ரெஃபரன்ஸாக வைத்து மீண்டும் அதே பாடலை ட்ரெய்லரில் இடம் பெற செய்துள்ளனர். ஆனால் மற்ற மொழிகளான இந்தி மற்றும் தெலுங்கில் வேறொரு காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜெயராம் விஜய்யுடன் போனில் பேசும்போது பாதுகாவலர்கள் சுற்றி வளைத்து விட்டனர். பிளான் பி ஏதேனும் வைத்துள்ளாயா? என்று கேட்கிறார். இதற்கு பதில் அளித்த விஜய் பிளான் பி மட்டுமல்ல, பிளான் இசட் வரைக்கும் நான் வைத்துள்ளேன் என்று கிண்டலாக கூறி, பின்னர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் பட தீம்மை பாடுவார். இந்த காட்சியும் மற்ற மொழி ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழில் மட்டுமே பார்த்தவர்கள் மீண்டும் தெலுங்கு ஹிந்தி ட்ரெய்லரை பார்த்து வருகின்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.