ENTERTAINMENT

"தி கோட் படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு அஜித்தின் சொன்ன அந்த வார்த்தை" - ஓபனாக சொன்ன வெங்கட் பிரபு

‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு, நடிகர் அஜித் குமார் அனுப்பிய மெசேஜ் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 68ஆவது படமான ‘தி கோட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டை அடுத்து, கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, இந்த படம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம் என்றும், விஜய் படங்களில் இது அதிக நாடுகளில் படம்பிடிக்கப்பட்ட படம் என்றும் கூறினார். மேலும் Deadpool Wolverine படத்திற்கு வேலை செய்த VFX நிறுவனம் இந்தப் திரைபடத்தில் பணியாற்றியுள்ளது என்றும், 23 வயது விஜயை காட்ட வேண்டும் என நினைத்ததாகவும், அதை உருவாக்கத்தான் ட்ரெய்லர் வெளியாவதற்கு தாமதமானது என்றும் தெரிவித்தார். அந்த ‘De-Ageing’ லுக் “என்னமாதிரி இல்லாம போயிட போகுதுனு டா” என விஜய் சொன்னார் என குறிப்பிட்ட அவர், டிரைலரை பார்த்துவிட்டு நடிகர் அஜித், “சூப்பரா இருக்குடா.. விஜய்க்கு உனக்கு எல்லோருக்கும் வாழ்த்துகள் சொல்லிடுடா” என மெசேஜ் அனுப்பியதாக தெரிவித்தார். இதையும் படிக்க: “புதிய தலைவன்… யாரும் தடுக்க முடியாது..” - அரசியல் பஞ்ச் வசனங்களுடன் வெளியான தி கோட்’ பட ட்ரெய்லர் தொடர்ந்து பேசிய அவர், எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை விஜயிடம் கற்றுக்கொண்டதாகவும், பாடல்களுக்கு கலவையான விமர்சனம் வந்துள்ளதாகவும், படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது உங்களுக்கு எல்லா பாடல்களும் பிடிக்கும் என கூறினார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / "தி கோட் படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு அஜித்தின் சொன்ன அந்த வார்த்தை" - ஓபனாக சொன்ன வெங்கட் பிரபு "தி கோட் படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு அஜித்தின் சொன்ன அந்த வார்த்தை" - ஓபனாக சொன்ன வெங்கட் பிரபு இந்த படம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம் என்றும், விஜய் படங்களில் இது அதிக நாடுகளில் படம்பிடிக்கப்பட்ட படம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 17, 2024, 8:40 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் ‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு, நடிகர் அஜித் குமார் அனுப்பிய மெசேஜ் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 68ஆவது படமான ‘தி கோட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டை அடுத்து, கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, இந்த படம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம் என்றும், விஜய் படங்களில் இது அதிக நாடுகளில் படம்பிடிக்கப்பட்ட படம் என்றும் கூறினார். விளம்பரம் இதையும் படிக்க: The Goat Trailer | ‘தி கோட்’ பட ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனித்தீர்களா? மேலும் Deadpool Wolverine படத்திற்கு வேலை செய்த VFX நிறுவனம் இந்தப் திரைபடத்தில் பணியாற்றியுள்ளது என்றும், 23 வயது விஜயை காட்ட வேண்டும் என நினைத்ததாகவும், அதை உருவாக்கத்தான் ட்ரெய்லர் வெளியாவதற்கு தாமதமானது என்றும் தெரிவித்தார். அந்த ‘De-Ageing’ லுக் “என்னமாதிரி இல்லாம போயிட போகுதுனு டா” என விஜய் சொன்னார் என குறிப்பிட்ட அவர், டிரைலரை பார்த்துவிட்டு நடிகர் அஜித், “சூப்பரா இருக்குடா.. விஜய்க்கு உனக்கு எல்லோருக்கும் வாழ்த்துகள் சொல்லிடுடா” என மெசேஜ் அனுப்பியதாக தெரிவித்தார். விளம்பரம் இதையும் படிக்க: “புதிய தலைவன்… யாரும் தடுக்க முடியாது..” - அரசியல் பஞ்ச் வசனங்களுடன் வெளியான தி கோட்’ பட ட்ரெய்லர் தொடர்ந்து பேசிய அவர், எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை விஜயிடம் கற்றுக்கொண்டதாகவும், பாடல்களுக்கு கலவையான விமர்சனம் வந்துள்ளதாகவும், படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது உங்களுக்கு எல்லா பாடல்களும் பிடிக்கும் என கூறினார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Ajith , Actor Vijay , The GOAT Movie , Venkat Prabhu First Published : August 17, 2024, 8:40 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.