ENTERTAINMENT

Thangalaan Review : விக்ரமின் தங்கலான் படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து , மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ளது தங்கலான் திரைப்படம், KGF-ல் வாழ்ந்த பழங்குடியினரை மையமாக வைத்தும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு படமும் சொல்லாத இவர்களின் கதையை படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் பா ரஞ்சித் செதுக்கியுள்ளார் என்று தான் கூற வேண்டும். படத்தில் விக்ரம் கதாபாத்திரம் காண்போரை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது, பழங்குடியினரின் வாழ்வியல், அவர்களின் கலாச்சாரம் மற்றும் உடை என ஒட்டுமொத்தத்தையும் கண்முன் காட்டுகிறது விக்ரமின் கெட்அப். பா ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாகும் என்று கூறப்பட்டது. சில பல காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதைப்பின் ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் வெளியாகும் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியானது. படத்தின் ப்ரோமோஷன், ட்ரைலர் வெளியீடு, இசைவெளியீடு என மிரளவைத்தது தங்கலான் குழு. ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று ஆக்ஸ்ட் 15 உலகம் முழுவதும் தங்கலான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? ரசிகர்களின் ட்விட்டர் ரெவ்யூ சொல்வதென்ன? #Thangalaan [ #ABRatings - 3.5/5] - Fairly Good First half followed by an okish second half 🤝 - Action blocks are made quite impressive & liked the scenes involving malavika👌 - #ChiyaanVikram performance & #GVPrakash music are the 2 strong pillars of the movie 🔥🔥 - Slow… pic.twitter.com/bkIWzOGmzj #Thangalaan : INTERNATIONAL STANDARD OF MAKING ❤️‍🔥 ChiyaanVikram purely given his HEART & SOUL for the movie 🫶 Yes it has the slow narration which requires patience, but worth watching for its making 👏 pic.twitter.com/6RGco4okRu Second half over 🥶 Bro @chiyaan Eats 100 kollywood and 1000 Goltiswood in his breakfast 🤯 Best ever climax and visuals in kollywood history 🥵😱 @beemji You are no1 director in kollywood na yeba enna screenplay and direction 😫 @MalavikaM_ You nailed it mam 😙 #Thangalaan pic.twitter.com/olABmBoF8x #Thangalaan - The level of making from @beemji is extraordinary🛐 And the movie is truly straight & perfect to its core story, without any deviation of his usual political elements 🤝 pic.twitter.com/Hahrzl8hTH தங்கலான் படம் குறித்து ட்விட்டரில் விக்ரமின் நடிப்பை பலர் பாராட்டி உள்ளனர். படத்தில் அனைவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பா.ரஞ்சிதின் இயக்கம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.