ENTERTAINMENT

விஜய்யின் 'தி கோட்' பட ட்ரெய்லரைப் பார்த்து பாராட்டிய அஜித்… என்ன சொன்னார் தெரியுமா?

தி கோட் பட ட்ரெய்லரில் விஜய் விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்த்து நடிகர் அஜித் பாராட்டியதாகவும், தன்னுடைய வாழ்த்து விஜய்க்கு தெரிவிக்குமாறு கூறியதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி அமரன், மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு, படம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் தன்னுடைய சினிமா பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வாக இருந்ததாக தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டில் உள்ள மிகப்பெரிய vfx நிறுவனம் இதற்கு கிராபிக்ஸ் அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தன்னுடைய படத்தில் மோகனை நடக்க வைக்க வேண்டும் என விருப்பம் இருந்ததாகவும், அது இந்த திரைப்படத்தில் நடந்துள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்தார். அத்துடன் விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் இருக்கிறார் என்பதையும் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தி உள்ளார். ‘தி கிரேட் ஆப் ஆல் டைம்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்களுக்கு கலவையான விமர்சனங்கள் இருப்பதை ஏற்றுக் கொண்ட வெங்கட் பிரபு, படம் வெளியாகும் போது அனைவரும் கொண்டாடுவார்கள் என உறுதியளித்தார். அதேபோல் இந்த திரைப்படத்தில் இடம் பெறும் விஜய்யின் இளமை தோற்றம் விமர்சனத்திற்கு உள்ளானது. அது குறித்து பேசிய வெங்கட் பிரபு, ட்ரெய்லரில் இருக்கும் இந்த தோற்றம்தான் இறுதியானது. அதை மாற்றியுள்ளோம் எனவும் கூறினார். இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான ‘ஜெமினி மேன்’ திரைப்படத்தின் தழுவலா என்ற கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் டிரைலரை அஜித் பார்த்து டேய் சூப்பராக இருக்கிறது என பாராட்டியதாகவும், தன்னுடைய வாழ்த்து விஜய்க்கு தெரிவித்து விடு என்று கூறியதாகவும் வெங்கட் பிரபு கூறினார். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் 6 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்வதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.