ENTERTAINMENT

‘வாழை பட பாதிப்பிலிருந்து வெளியே வரமுடியவில்லை’ – மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்த இயக்குனர் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் வாழை திரைப்படத்தை பார்த்துள்ள பிரபல இயக்குனர் ஷங்கர், படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘வாழை’. சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். கலையரசன், நிகிலா விமல், ஜெய் சதீஷ்குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் சூரி உள்ளிட்டோரும் படத்தை பாராட்டினர். குறிப்பாக பாலா பாராட்டு தெரிவித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் வாழை படத்தை பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிவந்துள்ள வீடியோவில் இயக்குனர் ஷங்கர் கூறியதாவது- மிகவும் உறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சினிமாவாக வாழை படம் உள்ளது. அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் என்னால் வெளியே வர முடியவில்லை. வாழை தாரை சிறுவர்கள் தூக்கிச் செல்லும் வலியை நம்மால் இங்கு உணர முடிகிறது. இனிமேல் வாழை பழங்களை பார்க்கும் போது படத்தில் நடித்தவர்கள் எல்லாம் நினைவுக்கு வருவார்கள். வாழை திரைபடத்தை பார்த்துவிட்டு இதயத்திலிருந்து வாழ்த்திய இயக்குனர் திரு . @shankarshanmugh sir அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் ❤️❤️❤️ ✨ #VaazhaiRunningSuccesfully #Vaazhaimovie pic.twitter.com/zHVbrfuEkq எதார்த்தமான சினிமாவில் ஓர் அழகியல் உள்ளது. இலக்கியம்போல் படம் இருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள். டெக்னிக்கலாகவும் வாழை திரைப்படம் பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை, எடிட்டிங் என அனைவரும் சிறப்பாக பணி செய்துள்ளனர். என்று பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து திரை பிரபலங்கள் வாழை திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருவதால் பட குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / ‘வாழை பட பாதிப்பிலிருந்து வெளியே வரமுடியவில்லை’ – மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்த இயக்குனர் ஷங்கர் ‘வாழை பட பாதிப்பிலிருந்து வெளியே வரமுடியவில்லை’ – மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்த இயக்குனர் ஷங்கர் இயக்குனர் ஷங்கர் தொடர்ந்து திரை பிரபலங்கள் வாழை திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருவதால் பட குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 9:04 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் வாழை திரைப்படத்தை பார்த்துள்ள பிரபல இயக்குனர் ஷங்கர், படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘வாழை’. சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். கலையரசன், நிகிலா விமல், ஜெய் சதீஷ்குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் சூரி உள்ளிட்டோரும் படத்தை பாராட்டினர். குறிப்பாக பாலா பாராட்டு தெரிவித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. விளம்பரம் இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் வாழை படத்தை பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிவந்துள்ள வீடியோவில் இயக்குனர் ஷங்கர் கூறியதாவது- மிகவும் உறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சினிமாவாக வாழை படம் உள்ளது. அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் என்னால் வெளியே வர முடியவில்லை. வாழை தாரை சிறுவர்கள் தூக்கிச் செல்லும் வலியை நம்மால் இங்கு உணர முடிகிறது. இனிமேல் வாழை பழங்களை பார்க்கும் போது படத்தில் நடித்தவர்கள் எல்லாம் நினைவுக்கு வருவார்கள். விளம்பரம் வாழை திரைபடத்தை பார்த்துவிட்டு இதயத்திலிருந்து வாழ்த்திய இயக்குனர் திரு . @shankarshanmugh sir அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் ❤️❤️❤️ ✨ #VaazhaiRunningSuccesfully #Vaazhaimovie pic.twitter.com/zHVbrfuEkq — Mari Selvaraj (@mari_selvaraj) August 25, 2024 விளம்பரம் எதார்த்தமான சினிமாவில் ஓர் அழகியல் உள்ளது. இலக்கியம்போல் படம் இருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள். டெக்னிக்கலாகவும் வாழை திரைப்படம் பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை, எடிட்டிங் என அனைவரும் சிறப்பாக பணி செய்துள்ளனர். என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இதையும் படிங்க - முதல்வன் படத்தில் முதலில் நடிக்க தேர்வான ரஜினி… வாய்ப்பை நிராகரித்த காரணம் என்ன தெரியுமா? தொடர்ந்து திரை பிரபலங்கள் வாழை திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருவதால் பட குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Director Shankar , mari selvaraj , vaazhai movie First Published : August 25, 2024, 9:04 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.