ENTERTAINMENT

Thangalaan Review: தங்கலான்... இது தான் உண்மையான கேஜிஎப் ! ரசிகர்கள் தரும் ஹானஸ்ட் ரிவ்யூ...

தங்கலான் இது தான் உண்மையான கேஜிஎப் ! ரசிகர்கள் தரும் ஹானஸ்ட் ரிவ்யூ நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் எடுக்க போவதாக அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடங்கி விட்டது. காரணம் மெட்ராஸ், அட்டக்கத்தி, சார் பட்ட பரம்பரை என வித்தியாசமான கதைகளை தருபவர் ரஞ்சித். நடிப்பில் எப்போதும் வித்தியாசம் காட்டி நடிப்பவர் விக்ரம். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஒரு படம் வருகிறது என்றால் அது நிச்சயம் மாறுபட்ட கதையாக தான் இருக்கும் என்று நம்பப்பட்டது. ரசிகர்களின் நம்பிக்கையை வீணாடிக்காமல் ரஞ்சித் இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத ஒரு கதையையும், இதுவரை விக்ரம் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரத்தையும் தந்துள்ளார் என்பதை ட்ரைலரிலே தெரிந்து கொள்ள முடிந்தது. இவர்களின் இந்த முயற்சி பலன் தந்ததா என பார்க்கலாம். பிரிட்டிஷ் காலத்தில் விக்ரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் நிலங்களை இழந்து அடிமைகளாக மிட்டா மிரசுகளிடம் இருந்து வருகின்றனர். தன் மக்களையும் அவர்களின் நிலங்களையும் எப்படியாவது மீட்க வேண்டும் என நினைக்கும் விக்ரமுக்கு வெள்ளையர்களுக்கு தங்கம் எடுத்து தர வேண்டிய சுழல் வருகிறது. இதை பயன்படுத்தி விக்ரம் தன் நிலங்களை மீட்டாரா இல்லையா என்பது தான் கதை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை திரைப்படங்கள் வாயிலாக பதிவு செய்து வரும் ரஞ்சித் இந்த முறையும் அதை செய்வனே செய்துள்ளார். விக்ரம் நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை. உடன் நடித்துள்ள மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி போன்றோரும் நன்றாக நடித்துள்ளனர். இதையும் வாசிக்க: Independence Day History: புதுக்கோட்டை சமஸ்தானம் : ஓர் இந்திய அரசனின் சொல்லப்படாத வரலாறு இதோ… ரசிகர்கள் சொல்வதென்ன: முதல் நாள் காட்சி என்பதால் அரங்கு‌ முழுவதும் பெரும்பாலும் விக்ரம் ரசிகர்கள் அதிகமாக காணப்பட்டனர். விக்ரம் ரசிகர்களை பொருத்தவரை விக்ரமின் நடிப்பு அவர்களை திருப்தி அடைய செய்துள்ளது என்பதை அவர்கள் தந்த பாஸிட்டிவ் ரிவ்யு மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. விடுமுறை நாள் என்பதால் இளைஞர்களை தாண்டி பெண்கள், குழந்தைகள் என பலர் குடும்பமாக வந்திருந்தனர் அவர்களுக்கும் படம் ஓகே தான். கூட்டத்தில் சில வயதானவர்களை பார்க்க முடிந்தது. என்ன படம்‌ அந்த காலத்தில் ஜெய்சங்கர் தங்க வேட்டைக்கு சென்ற அந்த படம் போல ஒரு கதை மத்தபடி ஒன்றும் இல்லை விக்ரம் மற்றும் பாட்டுக்காக பார்க்கலாம் என்றார் ஒரு முதியவர். படம் மாஸ் பக்க மாஸ் என ஒற்றை வரியில் ரிவ்யூ செய்து செல்லும் ரசிகர்களுக்கு மத்தியில், ரஞ்சித் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை உணர்ச்சி பொங்க சொல்பவர் இந்த படத்திலும் நிலங்களை, இழந்து அடிமைகளாக வாழும் மக்களின் வலியை நமக்கு காட்டியுள்ளார் என தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.