ENTERTAINMENT

Kotukaali Movie Review : சூரியின் கொட்டுக்காளி படம் எப்படி இருக்கு? படத்தின் விமர்சனம் இதோ..!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அனபெல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கொட்டுக்காளி. பின்னணி இசையே இல்லாமல் காட்சியின் ஒலியுடன் புதுமையான முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். ஒரு கிராமம், அங்கு இருக்கும் ஒரு குடும்பம், அவர்கள் சந்திக்கும் பிரச்சனை, அதற்கான தீர்வைத் தேடி செல்லும் ஒரு பயணமே கொட்டுக்காளி. பாண்டியாக நடித்துள்ள சூரி, தன்னுடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது. அதை ஓட்ட வேண்டும் என புறப்படுகின்றனர். உண்மையில் அந்தப் பெண்ணை பேய் பிடித்து இருக்கிறதா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? அதில் சொல்லியிருக்கும் கருத்து என்ன? என்பதை ஒரு மணி நேரம் 40 நிமிட காட்சிகளாக பி.எஸ்.வினோத்ராஜ் கொட்டுக்காளி படத்தை இயக்கி இருக்கிறார்.சூரியின் இல்லத்தில் இருந்து பேய் ஓட்ட செல்லும் இடம் வரை இருக்கும் அவர்கள் பயணத்தில் தன்னுடைய பார்வையையும், தான் சொல்ல நினைத்த விஷயங்களையும் காட்சிகளால் விவரித்துள்ளார் இயக்குனர். ஒரு வாழ்வியலை மிக எதார்த்தமாகவும், தத்ரூபமாகவும், எளிமையான முறையில் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். கொட்டுக்காளி படத்தில் சூரி, அனபெல் ஆகிய இருவரும் அட்டகாசமான நடிப்பை கொடுத்துள்ளனர். எந்த ஒரு இடத்திலும் காட்சியின் தன்மை மாறாமல் நடித்திருக்கின்றனர். அதிலும், நடிகை அனபெல்லுக்கு வசனங்களே கிடையாது. தன்னுடைய பார்வை மற்றும் கோபத்தின் வெளிப்பாடாக அவர் கொடுத்திருக்கும் நடிப்பு பாராட்ட வைக்கிறது. இவர்களைத் தவிர படத்தில் உள்ள மற்ற நடிகர்களும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களாகவே வாழ்ந்துள்ளனர். இதையும் படிங்க: முதல்வன் படத்தில் முதலில் நடிக்க தேர்வான ரஜினி… வாய்ப்பை நிராகரித்த காரணம் என்ன தெரியுமா? படத்திற்கு இசை கிடையாது என்பதால் ஒலிக்கலவையின் மூலமாக காட்சியின் தன்மையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அதேபோல் படத்தின் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது. இந்த திரைப்படத்தில் ஒரு வாழ்வியலை அதற்கு ஏற்ற வகையில் காட்சிகளாக கையாண்டு இருக்கிறார் பி.எஸ்.வினோத். ஒட்டுமொத்தத்தில் கொட்டுக்காளி ஒரு வாழ்வியலை பதிவாக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சி. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.