ENTERTAINMENT

நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு… திரைத்துறை சங்கங்களில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா

சித்திக் - ரஞ்சித் கேரளாவில் இளம் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், திரைத்துறை சங்கங்களில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர். சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அரவிந்த் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த மலையாள நடிகர் சித்திக், கடந்த 2016-ஆம் ஆண்டு, தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக, சுகமாயிரிகட்டே படத்தின் முன்னோட்ட திரையிடலின் போது, நட்சத்திர விடுதியில் சித்திக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் கூறினார். இதேபோன்று, கேரள திரையுலகில் பல்வேறு நடிகைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக், தனது பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் மம்முட்டிக்கு மின்னஞ்சல் மூலம் நடிகர் சித்திக் கடிதம் அனுப்பியுள்ளார். இதேபோன்று, கடந்த 2009-ஆம் ஆண்டு, பலேரி மாணிக்கியம் படத்திற்கான நாயகி தேர்வின் போது, மலையாள நடிகர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வங்காள நடிகை குற்றம்சாட்டினார். இந்நிலையில், கேரளா சலசித்ரா அகாடமியின் தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் விலகியதாக, அம்மாநில கலாசார துறை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு… திரைத்துறை சங்கங்களில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு… திரைத்துறை சங்கங்களில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா சித்திக் - ரஞ்சித் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக், தனது பதவியை ராஜினாமா செய்தார் படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 6:42 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் கேரளாவில் இளம் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், திரைத்துறை சங்கங்களில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர். சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அரவிந்த் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த மலையாள நடிகர் சித்திக், கடந்த 2016-ஆம் ஆண்டு, தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக, சுகமாயிரிகட்டே படத்தின் முன்னோட்ட திரையிடலின் போது, நட்சத்திர விடுதியில் சித்திக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் கூறினார். விளம்பரம் இதேபோன்று, கேரள திரையுலகில் பல்வேறு நடிகைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக், தனது பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் மம்முட்டிக்கு மின்னஞ்சல் மூலம் நடிகர் சித்திக் கடிதம் அனுப்பியுள்ளார். இதையும் படிங்க - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ”தன்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை” - இயக்குனர் நெல்சன் மறுப்பு விளம்பரம் இதேபோன்று, கடந்த 2009-ஆம் ஆண்டு, பலேரி மாணிக்கியம் படத்திற்கான நாயகி தேர்வின் போது, மலையாள நடிகர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வங்காள நடிகை குற்றம்சாட்டினார். இதையும் படிங்க - வாழை திரைப்படம் : மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய திருமாவளவன்! இந்நிலையில், கேரளா சலசித்ரா அகாடமியின் தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் விலகியதாக, அம்மாநில கலாசார துறை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actors , mollywood , sexual harassment First Published : August 25, 2024, 6:42 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.