ENTERTAINMENT

வாழை திரைப்படம் : மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்திய திருமாவளவன்!

வாழை திரைப்படம் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் இயக்குநர் மாரி செல்வராஜின் இல்லத்துக்கே நேரில் சென்று அவரை வாழ்த்தியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘வாழை’, சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொன்வேல், ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் படத்தின் மற்ற கதாபாத்திரத்தில் கலையரசன், நிகிலா விமல், ஜெய் சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரையுலகின் பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் ‘வாழை’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து மாரி செல்வராஜை கட்டித்தழுவி பாராட்டி நெகிழ்ந்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. மக்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 23ஆம் தேதி வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். மாரி செல்வராஜின் வாழை காண்போரின் நெஞ்சங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திரைக்கதை முதல் படத்தில் நடித்துள்ள காதிபத்திரங்கள் வரை ஒட்டுமொத்த படமும் மக்களின் உச்சகட்ட ஆதரவை பெற்று வருகிறது. உலகளவில் வெளியான வாழை திரைப்படம் முதல் நாள் ரூ. 1.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. படத்திற்கு கிடைக்கும் மக்களின் பேராதரவை பார்க்கும் போது படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்க்கபார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வாழை படத்தை பார்த்த விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாரி செல்வராஜின் இல்லத்திற்கே நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து கூறினார். குடும்பத்தார் மற்றும் படத்தில் சிறுவர்களாக நடித்த இருவருக்கும் திருமாவளவன் சால்வை அணிவித்து பாராட்டினார். அத்துடன் மாரி செல்வராஜின் இல்லத்திலேயே அவர்களின் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழை இலையில் உணவும் உண்டார். வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்தி இதயத்தை இறுகபற்றிக்கொண்ட அன்பு அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் ♥️♥️♥️♥️💐💐💐💐💐 ⁦ @thirumaofficial ⁩ pic.twitter.com/NFnHlBgWAc சமூக வலைதளத்தில் அதனை பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், நேரில் வந்து வாழ்த்திய திருமாவளவன், தனது இதயத்தை இறுகப் பற்றிக்கொண்டதாக குறிப்பிட்டு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.