ENTERTAINMENT

இரவு நேரங்களில் போன் செய்து பாலியல் தொல்லை.. நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை பரபரப்பு புகார்

மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு இயக்குநர்களும், நடிகர்களும் பாலியல் தொல்லை அளிப்பதாக ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை விவரங்கள் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர், முன்னணி திரைக் கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைத்துறை பற்றி எரிகிறது. மலையாள திரைத்துறையில் மட்டுமல்ல, தமிழ் திரைத்துறையிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும், அதை யாரும் மறுக்க முடியாது எனவும் நடிகை சனம் ஷெட்டி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ் திரைத்துறையில் பலரும் அறிந்த நடிகரான ரியாஸ் கான் மீது கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரியாஸ் கான், 1994-இல் மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து வரும் ரியாஸ் கான், தமிழில், பத்ரி, கஜினி, வின்னர், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த நடிகை ஒருவர், ரியாஸ் கான் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு புகைப்பட கலைஞரிடம் இருந்து தனது தொலைபேசி எண்ணைப் பெற்ற ரியாஸ் கான், இரவு நேரத்தில் செல்போன் மூலம் அழைத்து தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். தன்னை பாலியல் உறவுக்கு அழைத்ததுடன், அருவறுக்கத்தக்க வகையில் ரியாஸ் கான் பேசியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். Also Read : ‘வாழை’ பட சிறுவர்கள் போட்டோவை பகிர்ந்து திவ்யா துரைசாமி சொன்ன மெசேஜ் தனக்கு விருப்பமில்லாத பட்சத்தில், நெருங்கிப் பழக தயாராக இருக்கும் தோழிகளை தனக்கு அறிமுகப்படுத்த முடியுமா? என்றும் ரியாஸ் கான் கேட்டதாக அந்த நடிகை தெரிவித்துள்ளார். ரியாஸ் கான் போன்ற நபர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முன்னதாக, 2021ஆம் ஆண்டு மீ டூ சர்ச்சை வெடித்த போது, தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக திரைப்பட இயக்குநர் முதல் காவல் ஆய்வாளர் வரை 14 பேரின் பேர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடிகை, தற்போது நடிகர் ரியாஸ் கான் மீது குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து, நடிகர் ரியாஸ் கான் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.