CHENNAI

“விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்” - சென்னை மாநகராட்சி ஆணையர்

பதாகை சென்னை மாநகராட்சி அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளை அகற்ற, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023ன்படி, விளம்பர பலகைகள், பதாகைகள் வைத்துக்கொள்ள உரிய வழிகாட்டுதலுடன், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம் அவ்வாறு உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகள் அகற்றப்பட வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 20 அடி அகலம் 12 அடி உயரம் என்பது தான் அதிகபட்ட அளவாக இருக்க வேண்டும். சாலை சிக்னல்களில் பேனர்கள் அமைக்கக் கூடாது என பல விதிமுறைகள் உள்ளன. விளம்பர பலகை நிறுவ இதுவரை மாநகராட்சிக்கு 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் அவற்றில் 40 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாகவும் மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும் உரிய அளவீடுகளை தாண்டி வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகளை மாநகராட்சி அகற்றியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதையும் படிங்க: மும்பை ராட்சத பேனர் விபத்து - விளம்பர நிறுவன உரிமையாளர் பவேஷ் பிஹிண்டே கைது மேலும் கண்காணிப்பு பணியின் பொது சாலையோரங்கள், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லுாரிகள், பேருந்து நிறுத்தங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவுத்துள்ளார் தமிழ் செய்திகள் / சென்னை / “விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்” - சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! “விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்” - சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! பதாகை விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளை அகற்ற, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆணை. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : May 17, 2024, 8:30 pm IST Follow us on Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் சென்னை மாநகராட்சி அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளை அகற்ற, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023ன்படி, விளம்பர பலகைகள், பதாகைகள் வைத்துக்கொள்ள உரிய வழிகாட்டுதலுடன், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம் அவ்வாறு உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகள் அகற்றப்பட வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளம்பரம் சென்னையில் 20 அடி அகலம் 12 அடி உயரம் என்பது தான் அதிகபட்ட அளவாக இருக்க வேண்டும். சாலை சிக்னல்களில் பேனர்கள் அமைக்கக் கூடாது என பல விதிமுறைகள் உள்ளன. விளம்பர பலகை நிறுவ இதுவரை மாநகராட்சிக்கு 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் அவற்றில் 40 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாகவும் மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும் உரிய அளவீடுகளை தாண்டி வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகளை மாநகராட்சி அகற்றியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விளம்பரம் இதையும் படிங்க: மும்பை ராட்சத பேனர் விபத்து - விளம்பர நிறுவன உரிமையாளர் பவேஷ் பிஹிண்டே கைது மேலும் கண்காணிப்பு பணியின் பொது சாலையோரங்கள், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லுாரிகள், பேருந்து நிறுத்தங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவுத்துள்ளார் Follow us on . Tags: Chennai corporation First Published : May 17, 2024, 8:30 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.