CHENNAI

தாம்பரத்தில் கூடுதல் நடைமேடை பணிகள் விறுவிறுப்பு... துரிதமாக முடிக்க ரயில்வே திட்டம்!

தாம்பரம் ரயில் நடைமேடை தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப நடைமேடைகளின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக 12வது தண்டவாள வழித்தடம் அமைக்கும் பணி, துரிதகதியில் நடந்து வருகிறது. இதன் மூலம் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களை விட அதிக பயணிகளை கையாளும் ரயில் நிலையமாக கருதப்படுகிறது தாம்பரம் ரயில் நிலையம். சென்னை புறநகர் ரயில்கள் மட்டுமின்றி, பல எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாம்பரம் வழியாகவே பயணிக்கின்றன. இதன் காரணமாக தினசரி 2 லட்சம் பயணிகள் வரை தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். செங்கல்பட்டு செல்லும் பயணிகள் நலன் கருதி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு புறநகர் மின்சார ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. மக்கள் நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகம் செல்வோர் பெரும்பாலும் நம்புவது சென்னை புறநகர் ரயில்களைத் தான். Peak hour நேரத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு உரிய நேரத்தில் ப்ளாட்ஃபாரம் கிடைப்பதும் தாம்பரத்தில் சிக்கலாகிறது. இதன் காரணமாக புதிய தண்டவாளம் உருவாக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்த ரயில்வே, அதற்காக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் 55 புறநகர் ரயில்களின் சேவையை நிறுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்தது. எனினும், பகல் நேரங்களில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த முடிவை திரும்பப் பெற்றது. இந்த முடிவுக்கு ரயில் பயணிகளும் வரவேற்பு தெரிவித்தனர். இதனிடையே, தாம்பரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் 12ஆவது தண்டவாள வழித்தட பணிகளை வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய தெற்கு ரயில்வே துரித கதியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முழுமையடையும் பட்சத்தில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தாம்பரத்தில் உள்ள 6 பிளாட்பாரங்கள், சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 5 பிளாட்பாரங்கள், பிற ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை கையாள பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கூடுதலாக ஒரு பிளாட்பாரம் கிடைப்பதால், தாம்பரம் ரயில் நிலையம் வந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.