CHENNAI

தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு - காவல்துறை அதிரடி

கோப்புப் படம் தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும்போது, தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாமல், சென்னை விமான நிலையத்தில், பெரும் அளவு கூட்டத்தைக் கூட்டி, போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறு செய்ததாக, ஆலந்தூர் தேர்தல் அதிகாரி புகாரின் பேரில், சென்னை விமான நிலைய போலீசார், தேமுதிகவினர் மீது, 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மறைந்த நடிகரும், தேமுதிக அரசியல் கட்சி நிறுவனருமான விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது குடியரசு தலைவர் திரவுபதி முர்முவால் வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்றுக் கொண்டு, பிரேமலதா விஜயகாந்த் நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில், தேமுதிக கட்சியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் குவிந்து, பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததோடு, சென்னை விமான நிலையத்திலிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வரை பேரணியாகவும் சென்றனர். இதையும் படிக்க: சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் : சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு! தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாமல் இதுபோல பேரணி நடத்துவது, பெருமளவு கூட்டம் கூடுவது தவறு என்று சென்னை விமான நிலைய போலீசார் தேமுதிகவினரிடம் எடுத்துரைத்தனர். அப்போது காவல்துறைக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் தேமுதிக தொண்டர் ஒருவர் விமான நிலைய வளாகத்திற்குள் நின்ற, கார் ஒன்றின் மேல் ஏறி, கொடிக்கம்பத்தால், காரின் மேல் பகுதியை அடித்து சேதப்படுத்தினார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து, சென்னை விமான நிலைய போலீசார் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையும் படிக்க: “பத்ம பூஷன் விருதை வாங்கும்போது என மனசுல இருந்ததெல்லாம்…” பிரேமலதாவின் நெகிழ்ச்சிப் பகிர்வு! இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியான தாசில்தார், தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி செயல்பட்டதாக தேமுதிகவினர் மீது, சென்னை விமான நிலைய காவல்துறையிடம், புகார் செய்தார். அதன் பேரில் சென்னை விமான நிலைய போலீசார், தேமுதிக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சந்தோஷ் குமார் உட்பட தேமுதிகவினர் மீது, (143) சட்ட விரோதமாக கூடுதல், (147) கலகம் செய்ய கூட்டத்தை கூட்டுதல், (341) தனி நபரை முறையற்ற விதத்தில் தடுப்பது, (353) அரசு ஊழியரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.