COIMBATORE

விளம்பரம் பார்த்தால் வருமானமா? MY V3 ADS நிறுவனம் மீது புகார்

வி3 விளம்பரம் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் கிடைக்கும் எனக்கூறி பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக புகாரில் சிக்கிய MY V3 ADS நிறுவனம், ஏற்கெனவே V3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் மோசடி செய்ததாக மற்றொரு புகார் எழுந்துள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் MY V3 ADS நிறுவனம், செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்த புகாரின் பேரிலும், கோவை மாநகர போலீசார் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், MY V3 ADS நிறுவனம், ஏற்கனவே V3 ஆன்லைன் டிவி என்ற பெயரில், ஆயிரக்கணக்கானோரிடம் பணம் பெற்று கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையத்தில் புகார் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட மக்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மோசடி குறித்து விளக்கினர். இதுகுறித்து ஸ்டாலின் என்பவர் கூறுகையில், ” 5 ஆண்டுகளுக்கு முன்பு V3ஆன்லைன் டிவி என்ற நிறுவனத்தை விஜயராகவன், குமாரி, சிவசங்கர் ஆகியோர் இணைந்து தொடங்கினர். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வந்தது. ரூ.600 ரூபாய் செலுத்தி, ஒரு தயாரிப்பை வாங்கிய பின்னர், விளம்பரம் பார்த்தால் வருமானம் வரும் என கூறினர். இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க ஏன் மத்திய அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி இப்படி ரூ. 18,000 கட்டி 6 நபர்களை சேர்த்து விட்டால் மாதம் ரூ.12,000 வருமானம் வரும். ரூ.1,26,000 செலுத்தி உறுப்பினரானால் மாதம்தோறும் வருமானம் வரும் என்றெல்லாம் கூறினர். இதை நம்பி பல ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்தனர். அவர்களும் இரண்டு ஆண்டுகள் முறையாக பணம் அளித்து வந்தனர். திடீரென ஒரேநாளில் நிறுவனம் மூடப்பட்டது. அப்போது அந்நிறுவனத்தில் மார்கெட்டிங் இயக்குநராக இருந்த சக்தி ஆனந்தன் என்பவரை வைத்து தற்போது MyV3Ads என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி அதே பாணியில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தையும் விரைவில் மூடும் திட்டம் அவர்களுக்கு உள்ளது. பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.