COIMBATORE

பாட்டி கால பாரம்பரிய வெண்ணெய் கடையும் மத்து... கலை வடிவில் கிளி மத்தாக்கிய பி.டெக் பெண்...

வெண்ணய் கடையும் மத்து நீண்ட காலத்திற்கு நலமான வாழ்வு வாழ்ந்த நம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் இந்த நவீன கால தலைமுறையினரால் மீண்டும் விரும்பி பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் நம் பாட்டி தாத்தா காலத்தில் தயிர் கடையப் பயன்படுத்தப்பட்ட கருவியை இந்த காலத்திற்குத் தக்க வகையில் பழைமையும் புதுமையும் கலந்து கோவையைச் சேர்ந்த ஹரிதா - சஞ்சய் தம்பதி உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கியுள்ள இந்த “கிளி மத்து” வெண்ணெய்யைப் பிரித்தெடுக்க அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவியின் நவீன வடிவாகும். கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மத்து இக்கால தலைமுறையினர் கண்ட உடன் கவர்ந்து விடுகிறது. மரத்தில் செய்யப்பட்ட இந்த மத்து கையால் செதுக்கி அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தயிரிலிருந்து வெண்ணெய்யைப் பிரித்தெடுப்பதற்காகப் பயன்படுத்திய மத்து பெரிய அளவில் இருப்பதாலும், மத்து பயன்படுத்தி வெண்ணெய் பிரிக்கும் பழக்கத்தை நம் அப்பா, அம்மா காலத்தில் கைவிட்டதாலும் அவை நமக்கு பரிச்சயம் இல்லாமல் போய்விட்டது. இதையும் படிங்க: சுதந்திர தின லீவுக்கு ஊருக்கு போறீங்களா… தென் மாவட்ட பயணிகள் வசதிக்கு சிறப்பு ரயில்… ஆனால் இந்த தம்பதியர் உருவாக்கியுள்ள கிளி மத்தைக் கொண்டு சிறியவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் எளிதாக வெண்ணெய் பிரித்தெடுக்க முடியும். ஆர்க்கிடெக் படித்துள்ள ஹரிதாவும், தனியார் துறையில் பணியாற்றும் அவரது கணவர் சஞ்சயும் சேர்ந்து, இந்த பாரம்பரிய மத்தினை நவீன காலத்திற்கு எற்ற வகையில் சிற்பி என்ற பிராண்ட் பெயரில் உருவாக்கி வருகின்றனர். இதுகுறித்து ஹரிதா கூறுகையில், “நானும் என்னுடைய கணவர் சஞ்சய் சேர்ந்து சிற்பி என்ற பிராண்ட் பெயரில் இத்தகைய பழமை சார்ந்த பொருட்களை உருவாக்கி வருகிறோம். நாங்கள் சுயமாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, அனைவரும் பொறியியல் சார்ந்தும் மருத்துவம் சார்ந்தும் நிறைய பிஸ்னஸ் ஆப்பர்சுனிட்டி இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். நம் வாழ்வியலிலிருந்து மறைந்து அழியும் நிலைக்குச் சென்ற பாரம்பரியப் பொருட்களைக் கலை நயத்துடன் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கி வருகிறோம். விவசாயத்தை மேம்படுத்த எங்கள் குடும்பம் இருக்கிறது, எங்கள் அப்பா விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். சரி நாங்கள் கலையும் கலை சார்ந்த பொருட்களையும் மேம்படுத்தலாம் என்று சிற்பியை ஆரம்பித்துள்ளோம். இதையும் படிங்க: வாழைத்தாரில் வந்த இரண்டு உயிர்கள்… வாழ்வளித்த வாழை வியாபாரி… சிற்பியின் மூலம் கை வேலைப்பாடுகளால் உருவாக்கப்பட்ட கலையும் கலை சார்ந்த பொருட்களையும் வெளிக்கொண்டு வரும் வகையில் ஒவ்வொரு பொருளையும் நாங்களே யோசித்து கார்பெண்டர் மூலம் செய்து வருகிறோம். அப்படி நாங்கள் உருவாக்கியது தான் இந்த கிளி மத்து. இந்த கிளி மத்து ஒரு ஸ்டோரி லைனுடன் உருவாக்கப்பட்ட பொருள். வெண்ணெய் கடைவதற்கு முன்பெல்லாம் ஒரு ட்ரெடிஷனல் மத்து ஒன்று வைத்திருப்பார்கள் இந்த காலத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அந்த மத்து எப்படி இருக்கும் என்று தெரியாது. அந்த மத்தை எப்படி பயன்படுத்தி வெண்ணெய் எடுப்பார்கள் என்றும் தெரியாது. இந்த பொருள் அனைவரும் வீட்டிலும் வைத்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள். நம்மால் ஏன் அதை எடுத்து ரீ டிசைன் செய்து பண்ணக்கூடாது என்று நினைத்துச் செய்தது தான் இந்த கிளி மத்து. முன்பெல்லாம் ஒரே ஒரு குச்சியின் கீழ் மத்து வைத்துக் கடைந்து கொண்டிருப்பார்கள். அதை நாங்கள் எடுத்து ரீடிசைன் செய்தோம். இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றில் ஒரு கீழடி… மண் மூடிய வரலாற்றை நடந்து சென்று கண்டறிந்த எழுத்தாளர்… இது முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட பொருள். அக்காலத்தில் அந்த மத்தை கடைய இரண்டு கைகள் பயன்படுத்துவார்கள். இப்பொழுது ஒரு கையில் பயன்படுத்தும் வகையில் நாங்கள் டிசைன் செய்துள்ளோம். இந்த ஐடியா நாங்கள் வயலினில் இருந்து எடுத்துள்ளோம். இந்த ஐடியாவை எங்கள் கார்பெண்டர் ரவி பொருளாக மாற்றிக் கொடுத்தார்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.