COIMBATORE

அயோத்தி ராமர் குறித்த சர்ச்சை கருத்தால் வெடித்த மோதல்!

திமுக – பாஜக மோதல் பொள்ளாச்சியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாஜக நகர தலைவர் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் திங்கட்கிழமை குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை விமர்சனம் செய்யும் வகையில் திமுக நிர்வாகி ஒருவர் இணையதளத்தில் பதிவிட்ட கருத்தால் மோதல் போக்கு உருவானது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குமரன் நகர் பகுதியில் வசித்து வரும் திமுக நிர்வாகி தென்றல் செல்வராஜ் மற்றும் அவரின் மகன் மணிமாறன் ஆகியோர் அயோத்தி ராமருக்கு மாட்டுக் கறி ரெடி என சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகி செல்வராஜ் வீட்டிற்கு சென்ற பாஜகவினர், அங்கிருந்தவர்களிடம் ராமர் படத்தை வழங்க முற்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகியான மணிமாறன் பெரியார் படத்தை வைத்துக்கொண்டு பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து போலீசார், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நகர தலைவர் பரமகுரு உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து,கைது செய்யப்பட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி பொள்ளாச்சி - கோவை சாலையில் காந்தி சிலை முன்பு திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன், பாஜகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து திமுகவினர் மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். மேலும், திடீர் மறியல் போராட்டத்தால் கோவை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன், ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில் திமுவினர் – பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.