COIMBATORE

கோழித் திருடர்கள் எனக் கூறி நரிக்குறவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்

பொள்ளாச்சி பொள்ளாச்சியில் முயல் வேட்டைக்கு சென்ற நரிக்குறவர்களில் ஒருவரை, கோழி திருட வந்ததாக சந்தேகப்பட்டு மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொன்றுள்ளனர். தவறான புரிதல் கொலையில் முடிந்தது எப்படி? கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பொன்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டையன், குமார். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் முயல் வேட்டைக்காக திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை அடுத்த சேரன் நகர்ப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தோட்டத்துப் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, இவர்களைப் பார்த்து கோழிகள் சத்தமிட்டபடி ஓடி உள்ளன. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் கோழி திருட வந்ததாக எண்ணி, செங்கோட்டையன், குமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அவர்கள் தாங்கள் வேட்டைக்கு மட்டுமே வந்ததாகவும், கோழிகளை திருட வரவில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனாலும், அதனை நம்பாத அந்த கும்பல், இருவரையும் அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து, கட்டைகளால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த செங்கோட்டையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேச்சு மூச்சில்லாமல் செங்கோட்டையன் விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நால்வரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவ்வழியாக சென்றவர்கள் செங்கோட்டையன், குமார் ஆகிய இருவரையும் மீட்டு உடுமலைப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த குமாருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது தகவல் அறிந்து செங்கேட்டையனின் உறவினர்கள் உடுமலைப்பேட்டை மருத்துவமனை முன் குவிந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதையும் படிக்க: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்.. ரகசிய கருக்கலைப்பு செய்த நர்ஸ்.. திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர். முயல் வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர்கள் கோழித் திருடர்கள் எனக் கூறி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.