COIMBATORE

போக்குவரத்து போலீசாருக்கு புதிய வசதி... வெயிலில் இருந்து காக்க கோவை மாநகராட்சி முயற்சி...

போக்குவரத்து போலீசாருக்கு புதிய வசதி... வெயிலில் இருந்து காக்க கோவை மாநகராட்சி முயற்சி... தமிழகமெங்கும் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தினசரி பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்பவர்கள், சாலையோர வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பாரபட்சம் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். பயணத்தின் போது சிறிது நேரம் வெயிலில் செல்வதற்கே நாம் இவ்வளவு அவதிப்பட வேண்டிய நிலையில் காலை முதல் மாலை வரை வெயிலில் சாலைகளில் நின்று போக்குவரத்தைச் சரி செய்யும் போக்குவரத்து காவலர்களின் பணி எவ்வளவு சிரமமானது எனச் சிந்தித்துப் பாருங்கள். அப்படி வெயிலில் நின்று சவாலான பணியை மேற்கொள்ளும் போக்குவரத்து காவலர்களின் வசதிக்காகக் கோவை மாநகராட்சி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. போக்குவரத்து காவலர்களின் வசதிக்காக டிராஃபிக் போலீஸ் பாக்ஸ் (traffic police box) என மாநகராட்சி மேற்கொண்ட முயற்சி போக்குவரத்து காவலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையும் படிங்க: திருநெல்வேலியில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள்… போலீஸ் எடுத்த சூப்பர் ஆக்‌ஷன்… இத்தனைக்காலம் சாலை நடுவே ஒரு திறந்தவெளி இரும்பு நிழற்குடை அமைத்து கையில் ஒலிபெருக்கியுடன் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி தான் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தைச் சரி செய்து நாம் பார்த்திருப்போம். அந்த நிழற்குடை இரும்பாக இருக்கும் காரணத்தினால் வெயில் காலங்களில் மேலும் அதிக வெப்பம் அதில் உணரப்படும். இதைத் தவிர்க்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு முதலுதவி உபகரணங்கள், அறிவுரை பலகைகள், உயர் அதிகாரிகள் கள ஆய்வு வரும் பட்சத்தில் அதற்குத் தேவையான மீட்டிங் அறை எனப் பல வசதிகள் அடங்கிய வகையில் இந்த புதிய டிராஃபிக் போலீஸ் பாக்ஸ்களை கோவையில் மாநகராட்சி அமைத்துள்ளது. கோவை மாநகராட்சி அமைத்துள்ள இந்த டிராஃபிக் போலீஸ் பாக்ஸ் தங்களுக்குப் பல வகையில் பயன் தருவதாகக் கோவை மாநகர் போக்குவரத்துத்துறை காவலர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்து போலீசாருக்கு புதிய வசதி... வெயிலில் இருந்து காக்க கோவை மாநகராட்சி முயற்சி... போக்குவரத்து போலீசாருக்கு புதிய வசதி... வெயிலில் இருந்து காக்க கோவை மாநகராட்சி முயற்சி... போக்குவரத்து போலீசாருக்கு புதிய வசதி... வெயிலில் இருந்து காக்க கோவை மாநகராட்சி முயற்சி... Traffic Police Box | கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து போக்குவரத்து போலீசாரை காக்கும் வகையில் கோவை மாநகராட்சி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Coimbatore,Tamil Nadu Last Updated : May 15, 2024, 10:35 am IST Follow us on Published By : Muthu Kathan Reported By : Alagesh Abilash தொடர்புடைய செய்திகள் தமிழகமெங்கும் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தினசரி பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்பவர்கள், சாலையோர வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பாரபட்சம் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். பயணத்தின் போது சிறிது நேரம் வெயிலில் செல்வதற்கே நாம் இவ்வளவு அவதிப்பட வேண்டிய நிலையில் காலை முதல் மாலை வரை வெயிலில் சாலைகளில் நின்று போக்குவரத்தைச் சரி செய்யும் போக்குவரத்து காவலர்களின் பணி எவ்வளவு சிரமமானது எனச் சிந்தித்துப் பாருங்கள். விளம்பரம் அப்படி வெயிலில் நின்று சவாலான பணியை மேற்கொள்ளும் போக்குவரத்து காவலர்களின் வசதிக்காகக் கோவை மாநகராட்சி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. போக்குவரத்து காவலர்களின் வசதிக்காக டிராஃபிக் போலீஸ் பாக்ஸ் (traffic police box) என மாநகராட்சி மேற்கொண்ட முயற்சி போக்குவரத்து காவலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையும் படிங்க: திருநெல்வேலியில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள்… போலீஸ் எடுத்த சூப்பர் ஆக்‌ஷன்… இத்தனைக்காலம் சாலை நடுவே ஒரு திறந்தவெளி இரும்பு நிழற்குடை அமைத்து கையில் ஒலிபெருக்கியுடன் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி தான் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தைச் சரி செய்து நாம் பார்த்திருப்போம். அந்த நிழற்குடை இரும்பாக இருக்கும் காரணத்தினால் வெயில் காலங்களில் மேலும் அதிக வெப்பம் அதில் உணரப்படும். விளம்பரம் இதைத் தவிர்க்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு முதலுதவி உபகரணங்கள், அறிவுரை பலகைகள், உயர் அதிகாரிகள் கள ஆய்வு வரும் பட்சத்தில் அதற்குத் தேவையான மீட்டிங் அறை எனப் பல வசதிகள் அடங்கிய வகையில் இந்த புதிய டிராஃபிக் போலீஸ் பாக்ஸ்களை கோவையில் மாநகராட்சி அமைத்துள்ளது. கோவை மாநகராட்சி அமைத்துள்ள இந்த டிராஃபிக் போலீஸ் பாக்ஸ் தங்களுக்குப் பல வகையில் பயன் தருவதாகக் கோவை மாநகர் போக்குவரத்துத்துறை காவலர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Follow us on . Tags: Coimbatore , Local News , Traffic Police First Published : May 15, 2024, 10:35 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.