COIMBATORE

ஒரு நாள் ட்ரிப் போதும்: கோவையின் பெஸ்ட் இயற்கை எழில் மிக்க இடங்கள்

பொருளாதார ரீதியாக செல்வச் சிறப்புபிக்கோர் உலக நாடுகளுக்கு பயணம் செய்து வருகின்றனர். ஆனால், சாமானியர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தமிழ்நாட்டிற்குள் உள்ள நகரம், வரலாற்றுப் பெருமை மிக்க நினைவுச் சின்னம், இயற்கை எழில் மிக்க இடம், ஆகியவற்றிற்குச் சென்று வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணைக் கவரும் பல இடங்கம் உள்ளன. ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏற்ற இடங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கோவை குற்றாலம் : கோவை மாவட்டம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கோவை குற்றாலம் தான். அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், காட்டிற்குள் நடைப் பயணம், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல் என பல விஷயங்கள் இந்த சுற்றுலாத்தலத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை முகடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. கோவை குற்றாலம் அமைந்துள்ள வனப்பகுதிக்குள் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. முதலில் வனத்துறை சோதனைச்சாவடியில் நுழைவு கட்டணத்தை கட்டிவிட்டு, வண்டியை நிறுத்தினால் அங்கு வனத்துறை வாகனமே நீர் வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும். வனத்துறை இறக்கிவிடும் இடத்தில் இருந்து வனத்திற்குள் 1 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டால் நீர் வீழ்ச்சியை அடைந்துவிடலாம். பரளிக்காடு சூழல் சுற்றுலா : கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது பரளிக்காடு. கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கி.மீ. தூரம் பயணித்தால் இயற்கை எழில் மிகுந்த இந்த இடத்தை அடையலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். பரளிக்காடு செல்ல வனத்துறையினரிடம் முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் 30 கி.மீ. பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து 40 கி.மீ. பில்லூர் சாலையில் வெள்ளியங்காடு, முள்ளி சோதனைச்சாவடியைக் கடந்து பயணித்தால் பரளிக்காட்டை அடையலாம். ஒரு நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, பரிசல் பயணம், மலைவாழ் மக்கள் சமைத்த உணவு என முழுமையாக இயற்கை வாழ்வுக்கு இந்த இடத்திற்கு ஒரு நாள் சென்று வரலாம். பரளிக்காடு செல்ல விரும்புவோர் என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். ஸ்மார்ட் சிட்டி குளங்கள் : பெரிய அளவிலான சுற்றூலாத்தளங்களே நகருக்குள் இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக வந்தது ஸ்மார்ட் சிட்டி திட்டம். இந்த திட்டத்தின் படி கோவை மாநகரில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட 7 குளக்கரைகள் புனரமைக்கப்பட்டன. குளத்தின் கரைப்பகுதிகள் பலப்படுத்தப்பட்டு அங்கு பூங்காக்கள், வண்ண விளக்குகள், சைக்கிள் பாதைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த குளங்கரைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதில் வாலாங்குளத்தில் படகு சவாரியும் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் சுடச்சுட ஸ்நேக்ஸ் சாப்பிட்டுக்கிட்டே குளத்தின் அழகை ரசிக்கலாம். வால்பாறை : மலைவஸ்தளங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஒரு இடம் நம் கோவை மாவட்டத்தில் உள்ளது. வால்பாறை தான் இந்த இடம். சுற்றிலும் மலைத்தொடர்கள், தேயிலை எஸ்டேட்டுகள், ஜில் என்ற காற்று என அட்டகாசமான மலைவஸ்தலமாக இந்த இடம் உள்ளது. கோவையில் இருந்து 108 கிலோ மீட்டர்களில் இந்த சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. வால்பாறை செல்லும் வழியிலேயே ஆனைமலை புலிகள் காப்பகம், சோலையார் அணை, குரங்கு அருவி, கூழாங்கல் அருவி உள்ளிட்ட அருவிகளும் உள்ளன. ஒரு நாள் சில்லெனச் சுற்றுலா சென்றுவர ஏற்ற இடமாக இந்த இடம் உள்ளது. ஆழியாறு அணை கடல் போல் மிகப்பிரம்மாண்டமான நீர் சேமிப்பு கிடங்காக இருப்பதால் இந்த அணைக்கு ஆழியாறு என்று பெயர் வரக்காரணம். பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்திற்காக இந்த அணை கடந்த 1962ல் கட்டப்பட்டது. ஆழியாறு அணை அமைந்துள்ள கரைப்பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்புக்கு வயல்வெளிகளும், தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இதையும் வாசிக்க : மாஞ்சோலைக்கு சுற்றுலா போறீங்களா… வனத்துறையிடம் எப்படி அனுமதி வாங்கனும்னு தெரிஞ்சிக்கோங்க..! இங்கேயே குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவும் அமைந்துள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக 67 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.