COIMBATORE

பி.ஆர்.நடராஜன் கோவையில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி சாத்தியமா?

தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டின் தொழில் முகம் என்ற அடையாளங்களுடன் இருக்கும் மாவட்டம் கோயமுத்தூர். துணி உற்பத்தி ஆலைகள், கிரைண்டர், தண்ணீர் பம்புகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு, மருதமலை முருகன் கோயில், கோவை குற்றாலம், சென்னைக்கு அடுத்ததாக அதிகளவில் ஐடி நிறுவனங்கள் ஆகியவை கோவை மாவட்டத்தின் சிறப்புகள். தமிழ்நாட்டின் 20வது மக்களவைத் தொகுதியாக உள்ள கோவையில், பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு 1957 முதல் 2019 வரை 17 முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகமுறை, அதாவது 5 முறை வென்ற கட்சி காங்கிரஸ் தான். இந்த கட்சியைச் சேர்ந்த குப்புசாமி அதிகபட்சமாக 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்ட நிலையில், சுமார் 45 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன். அவர் 5 லட்சத்து 71 ஆயிரத்து 150 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மக்களவையில் நடைபெற்ற 15 விவாதங்களில் பங்கேற்றுள்ளதோடு, இதுவரை 257 கேள்விகளையும் எழுப்பியுள்ளார். எம்.பி. நிதியின் மூலம் தொகுதியில் மொத்தம் 112 பணிகளை செய்துள்ள பி.ஆர்.நடராஜன், பொதுத்துறை ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மண்டல மருத்துவ மையத்தை கொண்டுவந்தார். அத்துடன் இவரது முயற்சியால், கோவை-பொள்ளாச்சி-பழனி தற்காலிக ரயில் சேவை, நிரந்தர சேவையாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளுடன் இணைந்து 120 கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடன் பெற்று தந்துள்ளதோடு, 117 பேருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து மருத்துவ உதவிகளையும் பெற்று கொடுத்துள்ளார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தந்ததோடு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீட்டு மனை பட்டா, குடிசை மாற்று வாரிய வீடுகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இருந்தாலும், தேர்தலின் அளித்த வாக்குறுதியின்படி, ஜாப் ஆர்டர்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை முற்றிலும் ரத்து செய்யப்படவில்லை. அதேபோல், அவர் உறுதியளித்த சிறுதொழில் முனைவோருக்கு நல வாரியம், கோவையில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானம், நகை தயாரிப்புக்கு தொழில்நுட்ப வசதியுடன் வடிவமைப்பு கலைக்கூடம் ஆகியவற்றை செய்து கொடுக்கவில்லை. ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் தற்போது வரை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சிறப்பாக செயல்பட்டதாக ஒரு தரப்பினர் தெரிவித்தாலும், அவரை பார்த்ததே இல்லை என்கின்றனர் மற்றொரு தரப்பினர்… ஆனால், அவர் ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை என பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் விமர்சித்துள்ளார். அந்த வகையில், வரும் தேர்தலில் பி.ஆர்.நடராஜன் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட்டால், வெற்றிக்கு கடுமையாக போராடித்தான் ஆக வேண்டும்… None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.