COIMBATORE

சிறகடிக்கும் 100 வகையான வண்ணத்துப்பூச்சி... கோவையில் பொதுமக்கள் கண்டுகளிக்க சூப்பர் ஸ்பாட்...

கோவை வண்ணத்துப்பூச்சி பூங்கா கோயம்புத்தூர், வெள்ளலூரில் உள்ள குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஆகஸ்ட் 8ஆம் தேதி வியாழனன்று திறக்கப்பட்டது. இந்த பூங்காவைப் பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பதால் அனைவரும் கண்டுகளிக்கலாம். கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வெள்ளலூர் குளத்தின் நீர் வழிப் பாதையைத் தூர்வாரி, குளத்திற்கு நீர் கொண்டு வந்த பின் வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியில் பல்வேறு பணிகள் துவங்கப்பட்டன. இதுமட்டும் இல்லாமல் இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி சங்க குழுவினரின் உதவியுடன் தொடர்ந்து ஒரு வருடம் குளக்கரையில் பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுப்பு நடத்தினர். இதில், 103 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வெள்ளலூர் குளக்கரையில் இருப்பது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இதையும் படிங்க: மேட்டூர் அணை உபரி நீர் வீணாகாது… சரபங்கா திட்டத்தால் பயன்பெறும் 1 லட்சம் ஏக்கர் நிலம்… இதன் அடுத்த கட்டமாக வெள்ளலூர் குளக்கரையில் பல உயிர்களுக்கு வாழும் சூழலை மேம்படுத்தவும், பட்டாம்பூச்சி இனங்களைப் பாதுகாக்கவும், மாணவர்கள் பொதுமக்களுக்குப் பல உயிர்களின் வாழ்கை சூழல் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கக் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்தனர். தொடர்ந்து நீர்வளத்துறை அனுமதியுடன், தனியார் நிறுவனங்களின் நிதியுதவியோடும் ரூ.66 லட்சம் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்கா திங்கள் முதல் சனி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களும் பார்வையிட இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த சுஜய் கூறுகையில், “கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள் மூலம் அமைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த பிறகு குளங்கள் காக்கவேண்டித் திட்டமிட்டு Facebook இல் குரூப் ஒன்றை ஆரம்பித்தோம். அதுமட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் வைத்து குளத்தைத் தூர்வாரினோம். இதையும் படிங்க: குமரியில் மலையோர கிராமங்களில் விளையும் பழங்கள்… விரும்பி வாங்கிச் செல்லும் வியாபாரிகள்… அப்பொழுது இந்த வெள்ளலூர் குளம் பற்றித் தெரியவந்தது. இந்த வெள்ளலூர் குளத்தில் 12 வருடமாக நீர் கிடையாது, ஏனென்று பார்த்தபோது வெள்ளலூர் குளத்தில் மேல் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும் அதை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து தண்ணீர் வராமல் இருந்தது. பின்பு அரசாங்கத்துடன் இணைத்து அந்த வாய்க்காலைப் புனரமைக்க ஆரம்பித்தோம். அப்பொழுது அங்கு இருந்தவர்களுக்கு ஹவுசிங் போர்டு யூனிட்டில் வீடு கொடுத்தோம். குளத்தையொட்டி இருக்கும் இந்த இடத்தில் மூலிகை மற்றும் மருத்துவத் தாவரங்கள் வைத்தோம். அப்படி வைக்கும் பொழுது பட்டாம்பூச்சி வர ஆரம்பித்தது. அப்பொழுது நாங்கள் தமிழ்நாடு பட்டர்பிளை சொசைட்டியில் வண்ணத்துப்பூச்சிகளை டாக்குமெண்ட் செய்தோம். டாக்குமெண்ட் செய்யும் பொழுது தமிழ்நாட்டில் 340 வகைகள் இருக்கின்றன. இங்கு 100 முதல் 103வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து வண்ணத்துப்பூச்சிக்குப் பூங்கா அமைக்கலாம் என்று மிலற்றான் பிரைவேட் லிமிடெட் உதவியுடன் வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாக்கினோம். இதையும் படிங்க: ஆங்கிலேயரைக் கவர்ந்த ஸ்விட்சர்லாந்து போன்ற கிளைமேட்… நீலகிரியை உருவாக்கிய கலெக்டர்… இப்பொழுது முழுவதும் திறந்து விட்டோம். இங்கு பொதுமக்களுக்கு ஞாயிறு ஒரு நாள் மட்டும் அனுமதி உண்டு. மற்ற தினங்களில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் டாக்குமெண்ட் செய்பவர்களுக்கு மட்டும் திறந்திருக்கிறோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முன்னதாக பதிவு செய்தால் மாணவர்கள் வந்து கண்டு களிக்கலாம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.