COIMBATORE

இன்ஸ்டாவில் வீடியோ... ஓட்டுநர் ஷர்மிளா மீது பாய்ந்தது வழக்கு

கோவை ஓட்டுநர் ஷர்மிளா மீது பாய்ந்த வழக்கு கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் தனியார் பேருந்தை இயக்கியதை தொடர்ந்து கோவையின் முதல் பேருந்து ஓட்டுநர் என சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமானார். தொடர்ந்து அவருக்கு ஏராளமான பிரபலங்கள், பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, திமுக எம்.பி கனிமொழியை அந்த பேருந்தில் பயணம் செய்ய வைத்ததாகக் கூறி தனியார் பேருந்து உரிமையாளர் தன்னை பணி நீக்கம் செய்ததாக ஷர்மிளா சர்ச்சையை கிளப்பினார். இந்த விவகாரத்தில் ஷர்மிளாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், வேலை இழந்த பெண் ஓட்டுநரான அவருக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன் ரூ.15 லட்சம் மதிப்பிலான மராசோ காரை பரிசாக வழங்கினார். இந்நிலையில், சர்மிளா கடந்த பிப்.2 ஆம் தேதி சத்தியமங்கலம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது சங்கனூர் சந்திப்பில் பணியில் இருந்த C1 காவல் நிலைய போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி, காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதையும் படிங்க : கேரளா அரசியலிலும் கால் பதிக்கும் விஜய்? கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் இதனைத்தொடர்ந்து ஷர்மிளா உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரியை வீடியோ எடுத்து, உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி லஞ்சம் கேட்பதாகவும், இது தொடர்பாக உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் IPC 506(i), 509, 66C தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் ஷர்மிளாவை நேரில் அழைத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதள பிரபலம் என்பதை பயன்படுத்தி, போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குறித்து அவதூறாக தகவல் பதிவிட்டதாக பெண் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.