COIMBATORE

My V3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் அதிரடி கைது!

மை வி3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் My V3 Ads என்ற செயலியை நடத்தி வருபவர் சக்தி ஆனந்தன். வீட்டில் இருந்தபடியே செல்போனில் விளம்பரம் பார்ப்பதாலும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பெற முடியும் என்பதே My V3 Ads செயலியின் விளம்பரம். இதில் இணைய, 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும். உறுப்பினராக சேர்ந்த பிறகு, செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் நாளொன்றுக்கு 5 ரூபாய் முதல் ஆயிரத்து 800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்கிறது My V3 Ads நிறுவனம். மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தது அந்த நிறுவனம். இதை நம்பி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், எம்.எல்.எம். முறையில் பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாகவும், மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகள் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 19ஆம் தேதி சக்தி ஆனந்தன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கத் தொடங்கியது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ். இதைத் தொடர்ந்து, கடந்த 29ஆம் தேதி கோவை நீலாம்பூர் எல்&டி பைபாஸ் சாலையில் குவிந்து, நிறுவனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள் My V3 Ads செயலி வாடிக்கையாளர்கள். அதுவரை My V3 Ads செயலி குறித்தும், அதன் உரிமையாளர் சக்தி ஆனந்தன் குறித்தும் அறிந்திராத பலர், இந்த கூட்டத்தை பார்த்து பிரமித்துப் போனதோடு, போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் கடிந்து கொண்டனர். அதன்பின்னர், சக்தி ஆனந்தன் வெளியிட்ட வீடியோவில், தன்னெழுச்சியாக மக்கள் கூடியதாகவும், தானே அந்த பகுதியை தேர்வு செய்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்… இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சக்தி ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை., மாஸ் காட்ட நினைத்து இப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என சக்தி ஆனந்தன் நினைத்தாரோ என்னவோ, பிப்ரவரி 5ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பிறகு பேட்டியளித்த அவர், அந்த கூட்டத்தை நான் கூட்டவே இல்லை என ஒரே போடாக போட்டார். அதே நேரத்தில், சக்தி ஆனந்தன் ஏற்கெனவே வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் இதேபோல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட சிலர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்., இந்த நிலையில், My V3 Ads நிறுவனம் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த முறையும் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே 200-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்திருந்தார் சக்தி ஆனந்தன்.கோ வை மாநகர ஆணையரை சந்தித்து மனு அளித்த பிறகே கலைந்து செல்வோம் என்றும் பிடிவாதம் பிடித்தபடி, ஆதரவாளர்களுடன் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் சக்தி ஆனந்தன். இதையடுத்து சக்தி ஆனந்தன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தது காவல்துறை.. கூட்டத்தை கூட்டும் சக்தி ஆனந்தன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, My V3 Ads நிறுவனத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார், அவரை இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, அவரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சக்தி ஆனந்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, சக்தி ஆனந்தனுடன் கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர், இரவு 11.40 மணி அளவில் வாடிக்கையாளர்கள் மற்றும் My V3 Ads ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, My V3 Ads செயலி பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு செயல்படவில்லை. இதனால், செயலி முடக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.