COIMBATORE

ஆன்லைனில் ஷூ ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சியில் ஆன்லைனில் ஷூ ஆர்டர் செய்தவருக்கு ஒரு பழைய கிழிந்த ஷூவும், ஒரு அறுந்த செருப்பும் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீதி வீதியாக அலைந்து திரிந்து பொருட்கள் வாங்குவதை விட, ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர். எலக்ட்ரானிக் பொருட்கள், காலணிகள், துணிமணிகளையும் ஆன்லைனில் மக்கள் அதிகளவு வாங்கி குவித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது ஒருசில குளறுபடிகள் ஏற்படுவதும் வாடிக்கையாகியுள்ளது. கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் பிரியன். தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தனியார் டெலிவரி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் புதிய வகை ஷூ ஒன்றை ஆர்டர் செய்தார். தொடர்ந்து 8 நாட்களுக்கு பிறகு தனது கைக்கு வந்த பார்சலை, வீட்டிற்கு எடுத்து வந்து ஆசை ஆசையாக பிரித்து பார்த்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா வாடிக்கையாளர்கள் கேட்ட பொருட்களுக்கு பதிலாக சரோஜா தேவி பயன்படுத்திய அற்புதப் பொருள் என ஒரு சோப்பு டப்பாவை ஏமாற்றி விற்பனை செய்வார். அதுப்போல புதிய ஷூ ஆர்டர் செய்த இளைஞருக்கு ஒரு பழைய கிழிந்த ஷூவையும், ஒரு அறுந்த செறுப்பையும் வைத்து அனுப்பியுள்ளது ஃப்லிப்கார்ட் நிறுவனம். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் filpkart வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல், டேப்லெட் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு பவுடர், டிவி ஆர்டர் செய்தவருக்கு மலிவான விலை டிவி டெலிவரி செய்யப்படுவது போன்ற குளறுபடிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இவற்றை சரிசெய்யவேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மறுபுறம் பொதுமக்கள் நேரடியாக சென்று கடைகளில் பொருட்களை வாங்கினால் வியாபாரிகளும் பயனடைவார்கள் எனவும், அதை புரிந்துகொண்டு இது போன்ற நிறுவனங்களில் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.. முகப்பு / கோயம்புத்தூர் / கிழிந்த ஷூ... அறுந்த செருப்பு.. ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி கிழிந்த ஷூ... அறுந்த செருப்பு.. ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ஆன்லைனில் வந்த பார்சலை வீட்டிற்கு எடுத்து வந்து ஆசை ஆசையாக பிரித்து பார்த்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : January 2, 2024, 7:03 am IST Follow us on Published By : Premi KK தொடர்புடைய செய்திகள் கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சியில் ஆன்லைனில் ஷூ ஆர்டர் செய்தவருக்கு ஒரு பழைய கிழிந்த ஷூவும், ஒரு அறுந்த செருப்பும் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீதி வீதியாக அலைந்து திரிந்து பொருட்கள் வாங்குவதை விட, ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர். எலக்ட்ரானிக் பொருட்கள், காலணிகள், துணிமணிகளையும் ஆன்லைனில் மக்கள் அதிகளவு வாங்கி குவித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது ஒருசில குளறுபடிகள் ஏற்படுவதும் வாடிக்கையாகியுள்ளது. கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் பிரியன். தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தனியார் டெலிவரி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டில் புதிய வகை ஷூ ஒன்றை ஆர்டர் செய்தார். தொடர்ந்து 8 நாட்களுக்கு பிறகு தனது கைக்கு வந்த பார்சலை, வீட்டிற்கு எடுத்து வந்து ஆசை ஆசையாக பிரித்து பார்த்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். விளம்பரம் பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா வாடிக்கையாளர்கள் கேட்ட பொருட்களுக்கு பதிலாக சரோஜா தேவி பயன்படுத்திய அற்புதப் பொருள் என ஒரு சோப்பு டப்பாவை ஏமாற்றி விற்பனை செய்வார். அதுப்போல புதிய ஷூ ஆர்டர் செய்த இளைஞருக்கு ஒரு பழைய கிழிந்த ஷூவையும், ஒரு அறுந்த செறுப்பையும் வைத்து அனுப்பியுள்ளது ஃப்லிப்கார்ட் நிறுவனம். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் filpkart வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இதையும் படிங்க: புத்தாண்டில் புதிய இலக்கை எட்டிய இஸ்ரோ… வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58..! விளம்பரம் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல், டேப்லெட் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு பவுடர், டிவி ஆர்டர் செய்தவருக்கு மலிவான விலை டிவி டெலிவரி செய்யப்படுவது போன்ற குளறுபடிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இவற்றை சரிசெய்யவேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மறுபுறம் பொதுமக்கள் நேரடியாக சென்று கடைகளில் பொருட்களை வாங்கினால் வியாபாரிகளும் பயனடைவார்கள் எனவும், அதை புரிந்துகொண்டு இது போன்ற நிறுவனங்களில் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.. விளம்பரம் Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Flipkart First Published : January 2, 2024, 7:03 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.