COIMBATORE

இந்த சிலையை கரைத்தால் மீனுக்கு கொண்டாட்டம்.. ஈகோ ஃப்ரெண்ட்லியாக தயாராகும் விநாயகர் சிலைகள்...

பல பல வண்ணங்களில் தயாராகும் விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கு… ஆனால் அதுக்குள்ளே விநாயகர் சதுர்த்திக்கான வைப் ஸ்டார்ட் ஆகிட்டு. அதற்கு காரணம் விநாயகர் சிலை செய்பவர்கள் அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது தான். சாலைகளில் பயணப்பட்டுச் செல்லும் போது திடீரென எங்காவது விநாயகர் சிலை செய்து கொண்டிருப்பதை நம்மால் தற்போது அதிகம் காண முடிகிறது. அந்தவகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்மண் கலையகத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த மண் கலையகத்தில் சுந்தர் என்பவர் பாரம்பரியமாக மண்பாண்டங்கள் செய்து விற்பனை செய்து கொண்டு வருகிறார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்குப் பல வகைகளில் விநாயகர் சிலைகளைச் செய்து விற்பனை செய்து வருகிறார். இவர்கள் செய்யும் இந்த விநாயகர் சிலை அரை அடி முதல் 10 அடி வரை உள்ளது. அரை அடியில் செய்யும் விநாயகர் சிலையானது கைகளால் உருவாக்கப்படும், அதற்கு மேல் செய்யப்படும் விநாயகர் சிலை மோல்டிங் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்தால் ரிஸ்க்… நோயில்லாத வாழ்வு பெற இது தான் சீக்ரெட்… நீர்நிலைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவைக் கொண்டு இவர் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்குப் பின்னர் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது மரவள்ளிக் கிழங்கு மாவானது நீரில் கலந்து மீன்களுக்கு உணவாக மாறிவிடும் எனக் கூறுகின்றனர். மேலும் அந்த விநாயகர் சிலைகளை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்து பல வண்ணங்களும் எந்த ரசாயனக் கலவையும் இல்லாத வாட்டர் கலர் தான் எனவும், ஜிகினா போன்ற வேறு பொருட்களை அதனுடன் கலக்காமல் வாட்டர் கலரை ஏர் பிரஷ் மூலம் விநாயகர் சிலைக்குப் பூசி அழகுபடுத்துவதாகவும் தெரிவித்தார். குபேரன், லட்சுமி, அன்னம், லிங்கம் மேல் விநாயகர், முருகரும் விநாயகரும், சாட்டை விநாயகர், சோபா விநாயகர், நிலா விநாயகர் போன்ற பல பல வகைகளில் விநாயகர் சிலைகளை இவர் வடிவமைத்து வருகின்றார். மேலும் இவர் விநாயகர் சதுர்த்தி தவிர்த்துப் பிற சமயங்களில் வீட்டிற்குத் தேவையான பாத்திர வகைகளை வெள்ளைக் களிமண்ணால் செய்து விற்பனை செய்து வருகிறார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.