COIMBATORE

டிபன் ₹10, அன்லிமிடெட் மதிய சாப்பாடு ₹35... தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஹோட்டலா..?

கோவையில் அளவற்ற மதிய உணவு, இதில் சாப்பாடு, குழம்பு, பொரியல் 35 ரூபாய்க்கு இட்லி, பொங்கல், தோசை, சப்பாத்தி, பூரி, கோதுமை உப்புமா, ரவை உப்புமா என வகை வகையான உணவுகளை காலை உணவா சாப்பிடனும்ன்னு ஆசை படுறீங்கன்னு வைங்க எவ்வளவு செலவாகும். ஆனால் இப்படி வகைவகையான உணவுகள் 10 ரூபாய்க்கு கிடைத்தால் எப்படி இருக்கும். இப்படி காலையில் பல வகை டிபன், மதியம் சாப்பாடு, பொரியல், கூட்டு என உணவு வகைகளை எளிய மக்களும் வாங்கி சாப்பிடும் வகையில் குறைவான விலையில் தரமான உணவினைச் சேவை மாணப்பான்மையோடு வழங்கி வருகிறது ஒரு உணவகம். கோவையில் கணபதி பகுதியில் இயங்கி வரும் கௌமாரம் செல்வம் உணவகம் தான் இப்படி சேவை மனப்பான்மையுடன் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தை நடத்தி வருபவர் செல்வம், இவர் மக்களின் பசியைத் தீர்க்க வேண்டும் என்று நினைத்து கணபதியில் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். நகரின் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான கணபதி பகுதியில் இயங்கும் இந்த உணவகத்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், வயதானவர்கள் என அனைவரும் அங்கு சென்று உணவு அருந்தி வருகின்றனர். இதையும் படிங்க: ஒரு மனிதனின் ஆயுட்காலத்திற்கு 612 மரங்கள்… ஆர்வமுடன் மரம் நடும் டிராபிக் போலீஸ்… இங்கு காலை உணவு வகைகள் 10 ரூபாய்க்கும், மதியம் அளவற்ற சாப்பாடு 35 ரூபாய்க்கும் கொடுத்து வருகிறார். இதனால் அனைவரும் வயிறும், மனதும் நிறையச் சாப்பிட்டு வருகின்றனர். இந்த உணவகத்தை நடத்தி வரும் செல்வம் கடந்த 50 ஆண்டுகளாகப் பந்தல் போடும் தொழில் நடத்தி வருகிறார். அப்பொழுது அவரிடம் வேலை செய்பவர்களுக்கு உணவு அளித்து வந்துள்ளார். அதைப் பெரியளவில் செய்ய வேண்டும் என யோசித்து இந்த கடையைத் திறந்து உள்ளார். இங்கு வந்து சாப்பிடுபவர்கள் மட்டும் அல்லாமல் பார்சல் வாங்கிச் செல்பவர்களுக்கும் இதே மலிவு விலையில் உணவு வழங்கி வருகிறார். இந்த உணவகத்தால் கல்லூரி மாணவர்கள், அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் என பலரும் பெரிதும் பயனடைகின்றனர். இந்த கௌமாரம் செல்வம் உணவகம் குறித்து உரிமையாளர் செல்வம் கூறுகையில், “நான் பந்தல் காண்ட்ராக்ட் தொழிலைக் கடந்த 50 வருட காலமாகச் செய்து வருகிறேன். செல்வம் பந்தல் நிலையம் என்றால் அனைவருக்கும் தெரியும். மக்கள் எல்லோரும் பசியாறனும், அது தான் இந்த ஹோட்டல் ஆரம்பித்ததன் நோக்கம். இதையும் படிங்க: Aadi Amavasai: பெண்கள் திதி தர்ப்பணம் கொடுக்கலாமா… புராணங்கள் சொல்வதென்ன… இந்த ஹோட்டல் ஆரம்பிப்பதன் காரணம் மக்கள் பசியாறனும். பந்தல் கம்பெனி, வாட்டர் கம்பெனி இருக்கிறது, அப்பா அம்மா எல்லாம் இலவசமாக உணவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போதும் நூற்றுக்கணக்கான ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இலவசமாக உணவு கொடுக்க முடியவில்லை அவர்களுக்கு பேட்டா மாதிரி கொடுத்து வந்தோம். இதை வேறுவிதமாகப் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். சாந்தி கீர், வடிவேலம்பாளையத்தில் ஒரு பாட்டி இட்லி ஒரு ரூபாய்க்கு கொடுத்து வருகிறார், அதுபோல் செய்ய வேண்டும் என பல இடங்களில் விசாரித்து அனலைஸ் செய்தோம். கடந்த ஐந்து மாதங்களாக இந்த கடை இயங்கி வருகிறது. கௌமாரம் சாமிகள் தான் எங்களுடைய குருநாதர். வடிவேலம்பாளையம் பாட்டிகள் மாதிரி ஆயிரம் இட்லிகள் காலையில் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். சாமிகள் இடமிருந்து ஆசீர்வாதம் கேட்டபோது நன்றி பெரிதாகவே பண்ணுங்கள் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறினார். பெரியவர்கள் சம்பாதித்ததில் கொஞ்சம் வாடகை வருகிறது. அதுமட்டுமில்லாமல் எங்களுடைய நிறுவனங்களிலிருந்தும், மக்களிடமிருந்தும் பணம் வாங்குகிறோம் யார் டொனேட் செய்தாலும் வாங்கிக் கொள்கிறோம். இப்படி நல்ல முறையில் சேவை மனப்பான்மையில் இதனைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இதையும் படிங்க: வயநாடு கோரம்: நிலச்சரிவு ஏன் ஏற்படுகிறது… நாசா விஞ்ஞானி சொல்வது என்ன காலையிலும், மதியத்திலும் சுமார் ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள். காலையில் 10, 15 வகை உணவு இருக்கிறது. ஒவ்வொன்றும் பத்து ரூபாய். தோசை, இட்லி, பொங்கல், சப்பாத்தி, பூரி சில ஐட்டம் பதினைந்து ரூபாய், சாம்பார் வடை 15 ரூபாய், தயிர் வடை 20 ரூபாய், வெரைட்டி ரைஸ் 20 ரூபாய். பார்சல் செய்து கொண்டால் ஒவ்வொன்றிற்கும் ஐந்து ரூபாய் அதிகம். மீல்ஸ் மட்டும் 35 ரூபாய் அதுவே பார்சல் செய்து கொண்டால் அறுபது ரூபாய் ஏனென்றால் அந்த சாப்பாடு வீட்டிற்கு சென்று சாப்பிட்டால் இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு இருக்கும். பார்சல் செய்யும் ஐடியா முன்பு இல்லை இப்போது அனைவரின் வேண்டுகோள் படி பார்சலும் செய்து கொடுக்கிறோம். எங்களுக்கு அமைந்திருக்கும் ஆட்களும் நன்றாக ஒத்துழைப்பு தருகிறார்கள். அவர்களும் பணத்தைத் தாண்டி சேவை மனப்பான்மையுடன் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.