COIMBATORE

கோவையில் ஒரே மேடையில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மணமக்களுக்கு திருமணம்

கோவையில் நடந்த மத நல்லிணக்க திருமணங்கள் கோவையில் ஒரே மேடையில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதுடன் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, அகில இந்திய கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய பெண்களுக்கு, இலவச திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர். 75 பெண்களுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு, சென்னையில் 17 ஜோடிகளுக்கும், திருச்சியில் 25 ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. மூன்றாவது கட்டமாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏழை, எளிய பெண்கள் 23 பேருக்கு இன்று திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து மணமக்கள் பங்கேற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மணமக்கள் கேரள செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். மத நல்லிணக்கம் வெளிப்படும் விதமாக கோவையில் ஒரே இடத்தில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த 23 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர்களில் ஆறு ஜோடி இந்துக்கள், மூன்று ஜோடி கிறிஸ்தவர்கள், பதினான்கு ஜோடி இஸ்லாமியர்கள். அவரவர் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் உற்சாகமுடன் தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தை ஆரம்பிக்க, 23 ஜோடிகளுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள், மளிகை சாமான்கள் என சீர்வரிசை தரப்பட்டன. மேலும் 10 கிராம் தங்கமும் தரப்பட்டன. மேலும் ஓவ்வொரு மதத்தவருக்கும் அவரவர் மதங்களின் வழிகாட்டுதலாக இருக்கும் குர்ஆன் , பைபிள் , பகவத் கீதை போன்ற நூல்கள் தரப்பட்டன. இந்த விழாவில் கலந்து கொண்ட 2,000 பேருக்கும் அசைவு உணவு பரிமாறப்பட்டன. வறுமையில் வாடிய ஏழை, எளிய பெண்களுக்கு மிக முக்கியமான தருணத்தை ஏற்படுத்தித் தந்த அரசியல் கட்சிக்கு மணமக்களின் உறவினர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.