PUDUKKOTTAI

வெயிலுக்கு ரெஸ்ட்... வெளுத்து வாங்க போகும் கனமழை...

புதுக்கோட்டையில் கனமழை - வானிலை மையம் கொடுத்த புதிய அப்டேட் தமிழகம் முழுவதும் அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டைமாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது சில நாட்களாக வானிலை அப்படியே எதிர் மாறாக வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும், தூரல் மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் மழை மற்றும் வெயில் அளவு பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் சில வாரங்களாக வெயிலின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைந்து 27 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் இந்த வாரம் மிதமான மழை மற்றும் வாரத்தின் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் கனமழை வரை அதாவது 60 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் இருந்தே பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை வரை பெய்ததை தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசும் என்றும் இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்ததை தொடர்ந்து தற்போது நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி உள்ள நிலையில் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / TN Rain Update : வெயிலுக்கு ரெஸ்ட்... வெளுத்து வாங்க போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த புதிய அப்டேட்... TN Rain Update : வெயிலுக்கு ரெஸ்ட்... வெளுத்து வாங்க போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த புதிய அப்டேட்... புதுக்கோட்டையில் கனமழை - வானிலை மையம் கொடுத்த புதிய அப்டேட் TN Rain Update | புதுக்கோட்டையில் வெளுத்து வாங்க போகும் கனமழை வானிலை மையம் தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : June 5, 2024, 4:33 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் தமிழகம் முழுவதும் அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டைமாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது சில நாட்களாக வானிலை அப்படியே எதிர் மாறாக வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும், தூரல் மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் மழை மற்றும் வெயில் அளவு பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். விளம்பரம் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் சில வாரங்களாக வெயிலின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைந்து 27 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் இந்த வாரம் மிதமான மழை மற்றும் வாரத்தின் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் கனமழை வரை அதாவது 60 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் கடந்த வாரத்தில் இருந்தே பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை வரை பெய்ததை தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசும் என்றும் இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்ததை தொடர்ந்து தற்போது நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி உள்ள நிலையில் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , pudukottai First Published : June 5, 2024, 4:33 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.