PUDUKKOTTAI

Akshaya Tritiya 2024: அட்சய திரிதியை நாளுக்கு இத்தனை சிறப்புகளா?

அட்சய திருதியை சிறப்புகள் அட்சய திரிதியை நாளுக்கு இத்தனை சிறப்புகளா…இந்த நாளின் சிறப்பு குறித்து விளக்கும் அர்ச்சகர் லோகேஷ்.. அட்சய திரிதியை அன்று எது துவங்கினாலும் அந்த நல்ல செயல் பெருகி கொண்டே செல்லும் என்பது பொதுவான நம்பிக்கை உள்ளது… எனவே அந்த அட்சய திரிதியை நாளின் பொதுவான சிறப்புகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர் லோகேஷ் விளக்குகிறார். அட்சய திருதியை என்பது அட்சயம் என்றால் குறையாதது என்று பொருள். திரிதியை என்றால் அமாவாசையிலிருந்து மூன்றாவது நாள் திருதியை நாளாக கடைபிடிக்கப்படுகிறது . அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாளை அட்சய திரிதியை நாளாக கொண்டாடுகிறோம். அட்சய திருதியை என்பது எப்போதும் குறையாத அட்சய பாத்திரம் என்றும் கூற முடியும். சிறப்பு பெற்ற இந்த நாளில் எந்த செயல் செய்தாலும் அல்லது துவங்கினாலும் அது செழித்து வளர்ந்து கொண்டே போகும் என்பது ஐதீகம். இந்த உலகம் என்பது பிரம்மாவால் படைக்கப்பட்டது. அப்படி பிரம்மாவால் இந்த உலகம் படைக்கப்பட்ட அந்த நாள் அட்சய திரிதியை நாளாகும். மேலும் பரசுராமன் அவதரித்த நாளாகவும் இந்த அட்சய திருதியை நாள் விளங்குகிறது. மேலும் நதிகள் பூமிக்கு வரங்களாக கிடைக்கப்பெற்ற நாளாகவும் இந்த சிறப்புமிக்க நாள் விளங்குகிறது. இதையும் வாசிக்க: இந்த கோவிலுக்கு போய் இருக்கீங்களா? விருதுநகரில் மலையை குடைந்து கட்டப்பட்ட சிவன் கோயில்! பொதுவாக மக்கள் அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் ஆனால் இந்த சிறப்புமிக்க நன்னாளில் உணவு தானம், இல்லாதோருக்கு உதவுதல் ,எளிய மக்களுக்கு ஏதேனும் கொடுத்து உதவுதல், போன்ற அனைத்து விதமான நல்ல காரியங்களையும் செய்யலாம். அட்சய திருதியை என்பது வளர்பிறை கொண்ட மிகவும் அற்புதமான நாளாகும் . அந்த நாளில் அன்னதானம் கொடுத்து பல்வேறு சேவைகளை செய்து வாழ்க்கையின் மிகப்பெரிய பலன்களை பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு அந்த நாளில் கோவிலுக்கு செல்லலாம், சுவாமியை வழிபடலாம் . எனவே இத்தனை சிறப்புகள் வாழ்ந்த அட்சய திருதியை அன்று அனைவரும் நல்ல காரியங்களை செய்து வாழ்க்கையில் நன்மைகள் பெறலாம் என்று அர்ச்சகர் தெரிவிக்கிறார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.