PUDUKKOTTAI

அட்சய திருதியை - இந்த பூஜைகளை கட்டாயம் செய்தால் வீட்டில் குடியேறும் மகாலட்சுமி...

அட்சய திருதியை சிறப்பு பூஜைகள் இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை நாட்களில் ஒன்றாக அக்ஷய திரிதியை உள்ளது. இது செல்வ வளம் மற்றும் புதிய ஆரம்பத்திற்கான நாளாக கருதப்படுகிறது. அதனால் இந்த நாள் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமிக்கும், அவரது பதியான திருமாலுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அக்ஷய திரிதியை அன்று நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்து விதமான துன்பங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை நீக்கி, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை தரும் என்பது நம்பிக்கை. அதனால் இந்த நாளில் மகிழ்ச்சி மற்றும் செல்வ வளம் வேண்டி ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாறு பல்வேறு சிறப்பு நிறைந்த அட்சய திருதியை நாளில் வீட்டில் பூஜை செய்யும் முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 2024ம் ஆண்டில் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று காலை 06.33 மணி துவங்கி, மே 11ம் தேதி காலை 04.56 மணி வரை திரிதியை திதி உள்ளது. மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது. அக்ஷய திரிதியை அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, சுத்தமான ஆடைகளை உடுத்த வேண்டும். பிறகு கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டின் பூஜை அறையிலோ விளக்கேற்றி வழிபட வேண்டும். இதையும் வாசிக்க: ummer Health Tips | கோடைக்காலத்திலிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்… பிறகு மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட வேண்டும். அவர்களுக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் மகாலட்சுமிக்கு பொங்கல், பால் பாயசம் போன்ற நெய்வேத்தியங்களை படைத்து வழிபாடு செய்யலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர் கணேசன் தெரிவிக்கின்றார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை அன்று இந்த பூஜை மட்டும் செய்ங்க... வீட்டில் செல்வம் பெருகும்.. Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை அன்று இந்த பூஜை மட்டும் செய்ங்க... வீட்டில் செல்வம் பெருகும்.. அட்சய திருதியை சிறப்பு பூஜைகள் Akshaya Tritiya 2024 | அட்சய திருதியை நாளில் வீட்டில் பூஜை செய்யும் முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Pudukkottai,Tamil Nadu Last Updated : April 28, 2024, 11:07 am IST Follow us on Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை நாட்களில் ஒன்றாக அக்ஷய திரிதியை உள்ளது. இது செல்வ வளம் மற்றும் புதிய ஆரம்பத்திற்கான நாளாக கருதப்படுகிறது. அதனால் இந்த நாள் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமிக்கும், அவரது பதியான திருமாலுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அக்ஷய திரிதியை அன்று நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்து விதமான துன்பங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை நீக்கி, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை தரும் என்பது நம்பிக்கை. அதனால் இந்த நாளில் மகிழ்ச்சி மற்றும் செல்வ வளம் வேண்டி ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாறு பல்வேறு சிறப்பு நிறைந்த அட்சய திருதியை நாளில் வீட்டில் பூஜை செய்யும் முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். விளம்பரம் 2024ம் ஆண்டில் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று காலை 06.33 மணி துவங்கி, மே 11ம் தேதி காலை 04.56 மணி வரை திரிதியை திதி உள்ளது. மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது. அக்ஷய திரிதியை அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, சுத்தமான ஆடைகளை உடுத்த வேண்டும். பிறகு கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டின் பூஜை அறையிலோ விளக்கேற்றி வழிபட வேண்டும். விளம்பரம் இதையும் வாசிக்க: ummer Health Tips | கோடைக்காலத்திலிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்… பிறகு மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட வேண்டும். அவர்களுக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் மகாலட்சுமிக்கு பொங்கல், பால் பாயசம் போன்ற நெய்வேத்தியங்களை படைத்து வழிபாடு செய்யலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர் கணேசன் தெரிவிக்கின்றார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: akshay tritiya , Hindu Temple , Local News , Pudukkottai First Published : April 28, 2024, 11:07 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.