PUDUKKOTTAI

தொண்டைமான் மன்னர்களின் அரசவை காட்சிகள் முதல் போர் உடைகள் வரை...  பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்கள்...

புதுக்கோட்டை அருங்காட்சியகம் புதுக்கோட்டை உள்ள பழமையான அருங்காட்சியகம் பல அரிய பொருட்களை தன்னகத்தே கொண்டு, தொன்மையையும், வரலாற்று வளர்ச்சியின் படிநிலைகளையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ தொலைவில் திருக்கோகரணம் என்ற இடத்தில் இருக்கிறது பழமையான புதுக்கோட்டை அருங்காட்சியகம். இது சுற்றுலா பயணிகளும், புதுக்கோட்டை மக்களும் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும். புதுக்கோட்டை மாநகரின் திருக்கோகர்ணத்தில் 1910ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பட்ட பழமையான அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம் இருக்கும் பொருட்களை கண்களுக்கு விருந்து படைப்போதுமட்டும் அல்லாமல், வியக்கவைக்கும் பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு தொல்லியல், நாணயவியல், மானிடவியல், விலங்கியல் ,புவி அமைப்பியல், தாவரவியல், ஆகிய வகைகளில் அரும்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் பித்தளை சிலைகள், கற்சிற்பங்கள் போர் கருவிகள், கத்தி, கோல், கேடயம், பீரங்கிகள், ஆபரணங்கள், ஓவியங்கள், செப்பு தகடுகள், மரசிற்பங்கள், நாணயங்கள், இசை கருவிகள், கல்வெட்டு பிரதிகள் ஆகியவை மிக நோ்த்தியான முறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓலைச்சுவடிகள், அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப் படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மானிட உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் போன்றவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இதையும் வாசிக்க: Vaazhai Movie Review : மனசு கஷ்டமா இருக்கு!! வாழை படம் பார்த்து வருந்திய ரசிகர்களின் ரிவ்யூ… குறிப்பாக இந்த அருங்காட்சியகத்தில் மேலும் சிறப்பாக புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள்,கூத்து கலைப்பொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தொண்டைமான் மன்னர்களின் அரசவை காட்சிகள், போர் உடைகள், தொண்டைமான் அரண்மனையின் சிறப்புகள் மற்றும் அரண்மனை மன்னர்களின் முக்கிய அம்சங்கள் வரைபடங்கள் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. தொண்டைமான் மன்னர்கள் பற்றிய பல்வேறு தகவல்களை காண முடிகிறது. இந்த அருங்காட்சியகத்தின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் விடுமுறையாகும். எனவே, நீங்கள் இங்கே செல்வதற்கு முன்னர், அருங்காட்சியகம் திறந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.