PUDUKKOTTAI

காசி - ராமேஸ்வரம் ஒரு சேர சென்ற பாக்கியம் நிறைந்த கோயில் - புதுகையில் எங்குள்ளது தெரியுமா?

புதுக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவில். புதுக்கோட்டை மாவட்டமானது பல்வேறு சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், ஆன்மீக சிறப்பு வாய்ந்த தலங்கள் என பல்வேறு சிறப்பு வாய்ந்த மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை நகர்ப்புறத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். புதுக்கோட்டையில் கீழ 3 ஆம் வீதியில் அமைந்துள்ளது இந்த வரதராஜ பெருமாள் கோவில். கோவிலின் சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து கோவில் பட்டாச்சார்யார் பாலாஜி பேசியபோது. இந்த கோவிலானது 100 ஆண்டுக்கு மேல் தொன்மை வாய்ந்த கோவில் ஆகும். இக்கோவிலில் மூலவர் சீனிவாச பெருமாள் உற்சவர் வரதராஜ பெருமாள் ஆவார். கோவில் கருவறையில் மேலே மீன் சின்னம் அமைந்துள்ளது எனவே பாண்டிய காலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் இங்குள்ள சிலைகள் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டுள்ளவை எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பழமையான வரதராஜ பெருமாள் கோவிலில் வைகானசாத முறைப்படி பூஜைகள், விழாக்கள் நடைபெறுகிறது. இதையும் வாசிக்க: அடிக்கடி உள்வாங்கி காணப்படும் ராமநாதபுர கடற்கரை… மீனவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்… இக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம், மாசி மாதம் ரதசத்தமி எனப்படும் ஒரே நாளில் பத்து வாகனத்தில் சுவாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெறும், அத்தோடு சித்திரைப் பௌர்ணமி அன்று தீர்த்தவாரி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருமண யோகம் வேண்டுவோர் மற்றும் குழந்தை வரம் வேண்டுவோர் வரதராஜ பெருமாளுக்கு பட்டு சாத்தி வழிபாடு செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வரதராஜ பெருமாள் கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் 8 மணி வரையிலும் ஆகும். சாந்தநாதர் சுவாமி கோவில்: புதுக்கோட்டை நகர்ப்புறத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சாந்தநாதர் சுவாமி ஆலயம். புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலங்களுள் ஒன்றாக திகழும் இந்த கோவில் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம். பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சிவன் கோயில் இது. ‘குலோத்துங்க சோழீஸ்வரம்’ என பெயர் பெற்ற இக்கோயில், பிற்காலத்தில் சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயிலாக மாறியது. இப்போது சாந்தநாத சுவாமி என அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரரும், நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை வேதநாயகி என்னும் பெயரில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி சரஸ்வதி ,கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன் ,சரபேஸ்வரர் பைரவர், ஆகிய சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளது. இதையும் வாசிக்க: உங்க வேட்பாளர் பத்தி தெரிஞ்சுக்கனுமா ? இது பண்ணுங்க மக்களே… முன்வினை பாவம், கிரக தோஷம், திருமண தடை நீங்க, கடன் பிரச்சனை தீர, சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து மக்கள் வழிபடுகின்றனர் காலை 6 மணிக்கு திறக்கப்படும் இத்திருக்கோவில் மதியம் 12 மணி வரையும், பின் மாலை 4:30 மணிக்கு மீண்டும் திறக்கபட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இங்கு ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம், மாசி வளர்பிறை திரயோதசி திதியன்று மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு வந்து சுவாமியை வழிபடுபவர்களுக்கு ஒருசேர காசி ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.