PUDUKKOTTAI

சுட்டெரிக்கும் கோடை வெயிலில்  இந்த உணவுகள் கட்டாயம்... சித்த மருத்துவரின் அட்வைஸ்...

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இந்த உணவுகள் கட்டாயம்... சுட்டெரிக்கும் கோடைக் காலம் வந்துவிட்டது. மார்ச் தொடக்கத்திலேயே, பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடைக் கால பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தினால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். உடல் உஷ்ணம், உடலில் நீர்ச்சத்து இல்லாமை, உணவுப்பழக்கத்தினால் வயிற்றுக் கோளாறு என பல உடல் உபாதைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே, கோடைக் காலத்தில் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும், உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்த்து, உடலுக்கு சக்தி தரும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவர் ரெங்கநாயகி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் நுங்கு, பதநீர், இளநீர் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அத்துடன் மோர் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அந்த காலகட்டத்தில் ஒருவர் வீட்டிற்கு சென்றால் கூட மோர் தான் கொடுப்பார்கள். அந்த காலகட்டத்தில் மோர் உணவில் முக்கிய பங்கு பெற்றிருந்தது. இதையும் வாசிக்க: ப்ரஸான ரோஸ் மில்க் சிரப்… எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்… எப்படி தெரியுமா? மோர் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலை படுத்தும். இந்த வெயில் காலத்தில் மோர் அதிகம் எடுத்துக் கொள்வதால் நீர்ச்சத்து பிரச்சினைகள் நீங்கும் என்ற கூடுதல் தகவல்களை ரெங்கநாயகி தெரிவித்தார். அத்துடன் இந்த கோடை காலத்தில் அதிகமாக பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்துவிட்டு, பழைய சாதம் ஊற வைத்து அதனை கஞ்சியாக கரைத்து சாப்பிட வேண்டும் என்றும் இந்த பழைய சாதத்தில் நீராகாரம் அதிக அளவில் உள்ளதாக கூறும் ரெங்கநாயகி, இந்த வெயில் காலத்தில் புளித்த மோர் மற்றும் பழைய சாதம் வெங்காயம் சேர்த்து எடுத்து கொள்வது மிகவும் நல்லது என்றும் எனவும் தெரிவிக்கிறார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இந்த உணவுகள் கட்டாயம்...சித்த மருத்துவரின் அறிவுரையை கேளுங்கள்... சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இந்த உணவுகள் கட்டாயம்...சித்த மருத்துவரின் அறிவுரையை கேளுங்கள்... சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இந்த உணவுகள் கட்டாயம்... Summer foods| கோடைக் காலத்தில் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும், உடலுக்கு சக்தி தரும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Pudukkottai,Tamil Nadu Last Updated : April 16, 2024, 6:45 pm IST Follow us on Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் சுட்டெரிக்கும் கோடைக் காலம் வந்துவிட்டது. மார்ச் தொடக்கத்திலேயே, பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடைக் கால பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தினால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். உடல் உஷ்ணம், உடலில் நீர்ச்சத்து இல்லாமை, உணவுப்பழக்கத்தினால் வயிற்றுக் கோளாறு என பல உடல் உபாதைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே, கோடைக் காலத்தில் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும், உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்த்து, உடலுக்கு சக்தி தரும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவர் ரெங்கநாயகி தெரிவித்துள்ளார். விளம்பரம் கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் நுங்கு, பதநீர், இளநீர் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அத்துடன் மோர் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அந்த காலகட்டத்தில் ஒருவர் வீட்டிற்கு சென்றால் கூட மோர் தான் கொடுப்பார்கள். அந்த காலகட்டத்தில் மோர் உணவில் முக்கிய பங்கு பெற்றிருந்தது. இதையும் வாசிக்க: ப்ரஸான ரோஸ் மில்க் சிரப்… எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்… எப்படி தெரியுமா? மோர் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலை படுத்தும். இந்த வெயில் காலத்தில் மோர் அதிகம் எடுத்துக் கொள்வதால் நீர்ச்சத்து பிரச்சினைகள் நீங்கும் என்ற கூடுதல் தகவல்களை ரெங்கநாயகி தெரிவித்தார். அத்துடன் இந்த கோடை காலத்தில் அதிகமாக பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்துவிட்டு, பழைய சாதம் ஊற வைத்து அதனை கஞ்சியாக கரைத்து சாப்பிட வேண்டும் என்றும் இந்த பழைய சாதத்தில் நீராகாரம் அதிக அளவில் உள்ளதாக கூறும் ரெங்கநாயகி, இந்த வெயில் காலத்தில் புளித்த மோர் மற்றும் பழைய சாதம் வெங்காயம் சேர்த்து எடுத்து கொள்வது மிகவும் நல்லது என்றும் எனவும் தெரிவிக்கிறார். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Local News , Pudukkottai , Summer Food First Published : April 16, 2024, 6:45 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.