PUDUKKOTTAI

மணமக்கள் போல வேடமிட்ட ஆண்கள்... கோவில் திருவிழாவில் நூதன வழிபாடு...

கோவில் திருவிழாவில் வேடமணிந்து நேர்த்திகடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுவாகவே கிராம பகுதிகள் தொடங்கி நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் அம்மன் கோவில்களில் திருவிழா, தேரோட்டம் போன்றவை அதிகளவில் நடைபெறும். வருடத்தின் ஒருமுறை திருவிழா என்பதால் வெளியூரில் வேலை செய்பவர்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்து குடும்பம் மற்றும் சொந்த பந்தங்களுடன் இணைந்து திருவிழாவை கொண்டாடி மகிழ்வர். திருவிழாவின் போது பால்குடம், காவடி, அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி போன்ற பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலி கொடுத்து நேர்த்திக்கடனை செலுத்துவர். அத்துடன் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் உள்ளது. அதாவது ஆண்கள் பெண்கள் போல வேடமணிதல், மணமக்கள் போல இரு ஆண்கள் வேடமணிதல், குறவன் குறத்தி, ராஜா ராணி, அத்துடன் சிவன், முருகன் போன்ற கடவுளின் வேடமும் அணிகின்றனர். இதன் பின்னணி என்னவென்றால் எந்த விதமான தவறான எண்ணம் இல்லாமல் கடவுளுக்கு இதனையும் ஒரு நேர்த்திக்கடன் செலுத்துவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் புலிக்கூத்து பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்-இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்‌ பங்கேற்றனர். இதில் அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் மேற்க்கொண்ட பின்பு நேர்த்தி கடன் வேண்டிக்கொண்ட பக்தர்கள் புலிவேடம், சிவன், முருகன், மணமக்கள், குறத்தி, பெண் வேடம், முதியவர்கள் வேடம், ராஜா ராணி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து ஆட்டம் பாட்டத்துடன் அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்தனர். அங்கு வேடமணிந்தவர்கள் நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர். தொடர்ந்து வேடமணிந்தவர்களை கோவிலைச் சுற்றி வலம் வந்து கோவிலான் கண்மாய்க்கு வந்தனர்.அங்கே படுகளம் பாய்தல் எனும் நிகழ்ச்சி‌ நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்னர் வேடமணிந்தவர்கள் வேடத்தை கலைத்தனர். இந்த திருவிழாவைக்காண ஆலவயல், கண்டியாநத்தம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.