PUDUKKOTTAI

RTI சட்டம்: ஆன்லைன் மூலம் RTI விண்ணப்பம் செய்வது எப்படி..?

RTI சட்டம் RTI - Right To Information act 2005தகவல் அறியும் உரிமை சட்டம் ஏழை, எளியோர் என அனைவரும் அனைத்து விதமான தகவல்களையும் தெரிந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 5 (1)இன் கீழ் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் நியமித்து உள்ளது. இவரிடம் மக்கள் என்ன தகவல்கள் பெற எந்த மனுக்களை அளித்தாலும் அதற்கு பொது தகவல் அலுவலர் பொறுப்பு ஆவார். அந்த மனுவிற்கு அவர் பதில் அளிக்க வேண்டும். 30 நாளுக்குள் பொது தகவல் அலுவலர் பதில் அளிக்க வேண்டும். இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சாதாரண தனி நபர்கள் தங்களது தகவல் உரிமைகளை பெற முடியும். இதற்கு ஸ்டேட் வங்கில் பத்து ரூபாய் செலான் எடுத்து மனு எழுதி என்ன தகவல்கள் தேவையோ அதனை கேட்டு பெற்றுக் கொள்ள முடியும். ஒரு சில கேள்விகளுக்கு இந்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டால் , மனு நிராகரிக்கப்படும் என்றும், மேலும் முக்கிய அரசு அலுவலகங்களில் ரகசியமாக வைத்துள்ள பதிவேடுகள் பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்கப்பட மாட்டாது. இதைத் தவிர சாதாரண மக்களின் அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்‌. ஒருவேளை பதில் அளிக்க தவறினால் ஒவ்வொரு மாநில தகவல் ஆணையருக்கும் மேல் முறையீடு மனு அளிக்க முடியும். மனு அளிப்பும் பதில் அளிக்காத அந்த பொது தகவல் அலுவலருக்கு தண்டனையும் விதிக்கப்படும். எனவே ஒவ்வொரு சாதாரண தனி நபரும் தகவல் உரிமை பெறுவதற்காக இந்த தகவல் அறியும் உரிமை சட்டமானது கொண்டுவரப்பட்டது. இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் தற்போது ஆன்லைன் மூலமும் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் அனைத்து இ சேவை மையங்களில் இருந்தும் அதே 10 ரூபாய் இ -ஸ்டாம்ப் பயன்படுத்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஆன்லைனில் பெற முடியும். இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சாதாரண எளியோரும் வழக்கறிஞர் போல் செயல்பட முடியும் என்கிறார் வழக்கறிஞர் ரெங்கப்பதாகதேவி. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.