PUDUKKOTTAI

மீன்பிடி திருவிழாவின் சிறப்பு கதை... இதில் இவ்வளவு சுவாரஸ்யமான விஷயம் இருக்கா?

மீன்பிடி திருவிழாவின் சிறப்பு கதை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் அதிக அளவில் நடத்தப்படும் பாரம்பரிய நிகழ்வான மீன்பிடி திருவிழா பற்றிய சுவாரஸ்யமான தகவலை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு மீன்பிடி திருவிழா என்பது கிராமப் புறங்களில் உள்ள குளங்கள், கண்மாய்களில் பல்வேறு வகையான மீன்களை வளர்த்து அதனை தண்ணீர் வற்றிய காலத்தில் ஊர் மக்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் அனைவரும் இணைந்து எந்த விதமான பிரிவினையும் இல்லாமல் ஒன்றாக ஓரே நேரத்தில் இறங்கி மீன்களை பிடிப்பது ஆகும். அதாவது புதுக்கோட்டை மாவட்டம் ஏரி, குளம், கண்மாய் என அதிக பாசன நீர் நிலைகளை கொண்ட மாவட்டமாகும். அந்த நீர்நிலைகளில் மீன்களை வளர்ப்பதும் நீர் வற்றியதும் அதனை பொதுமக்கள் அனைவரும் ஒரு திருவிழா போல ஒன்றாக இறங்கி குளத்தில் உள்ள மீன்களை பிடிப்பது மீன்பிடி திருவிழா ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த மீன்பிடி திருவிழா என்பது வருடந்தோறும் ஏப்ரல், மே,ஜூன் மாதங்களில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையும் வாசிக்க: TN Heavy Rain : கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை… ஒரு சில பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் வற்றும் சூழலில் உள்ள பாசன‌ கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். சாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி இந்த மீன்பிடி திருவிழாவை ஊர் ஒற்றுமைக்காக நடத்துவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். மேலும் விவசாயம் முடிந்து கோடை வெயிலுக்கு பின் நன்கு மழை பெய்து குளம் கம்மாய் நிரம்பி விவசாயம் மீண்டும் செழிப்பாக நடப்பதற்காக கடவுளை வேண்டி இந்த மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர். ஒரு கிராமத்தில் மீன்பிடி திருவிழா என்றால் முன்னரே அதற்காக சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றாய் கூடிய பின்னர் ஊர் பெரியோர்கள் வெள்ளை விடுதல் (அதாவது மீன்பிடிக்க ஆரம்பிக்கலாம் என்பது போல) ஒரு நிகழ்வுக்கு பின்னர் அனைவரும் ஒன்றாய் இறங்கி மீன்களை பிடித்து செல்கின்றனர். குறிப்பாக நாட்டு வகை மீன்களான கட்லா, ஜிலேபி, அயிரை, கெண்டை, கெளுத்தி போன்றவை மட்டுமே இங்கு வளர்க்கப்படுகின்றன. மேலும் நாட்டு வகை மீன்பிடி உபகரணங்களான பரி , கச்சா, ஊத்தை போன்றவை தான் இங்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இதையும் வாசிக்க: Fresh Fish : ப்ரஷ் மீன்களை வாங்கனுமா..? இந்த டிப்ஸ் பாலோ பண்ணிக்கோங்க… அத்துடன் மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை வியாபாரத்திற்கு எல்லாம் பயன்படுத்தாமல் அதனை வீட்டில் சமைத்து உண்ணுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஊர் மக்கள் ஒன்று கூடி ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு மீன்களை பிடிப்பதை பார்ப்பது நமக்கும் மன மகிழ்ச்சியை அளிப்பதாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.