NILGIRIS

பழம்பெருமைகளைத் தாங்கி நிற்கும் ஸ்டோன் ஹவுஸ்... லண்டன் பொருட்கள் கூட இங்கு இருக்கு...

ஊட்டி அரசு அருங்காட்சியகம் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரத்தின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது அரசு அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1724ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. ஸ்டோன் ஹவுஸ் என பலரும் அழைத்து வரும் இந்த இடம் கன்னிமாரா என்பவரது நினைவாகவே கன்னிமாரா விடுதியாக உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் அவர்களிடம் பணி புரியும் பணியாட்களுக்காக இதனைக் கட்டினர். பின்னர் ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் தங்கும் இல்லமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 2017ஆம் ஆண்டு முதல் அரசு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: கிராமத்தில் கடை போட்டு கல்லா கட்டலாம்… நல்ல லாபம் தரும் 5 தொழில்கள்… இந்த அருங்காட்சியகத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் வருகை புரிகின்றனர். இந்த அருங்காட்சியகத்தின் முகப்பிலேயே அழகிய கல் கட்டிடம் அதன் உட்பகுதியில் நீலகிரியில் உள்ள வன விலங்குகளின் தலைப் பாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வன உயிரினங்கள், பறவை இனங்கள் மற்றும் பாம்பு பூச்சிகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நீலகிரியில் கண்டெடுக்கப்பட்ட ஓலைச் சுவடிகள், பனை ஓலைகள், மூங்கில் ஓலைச் சுவடிகள் ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புதைபடிவங்கள், கல்லாகிய மரங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாள்கள், இரட்டை தேங்காய் என அழைக்கக்கூடிய கடல் தேங்காய், பழங்கால நாணயங்கள் மற்றும் பழங்கால இசைக்கருவிகள், தோற்பாவைகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களாக வசிக்கக்கூடிய இருளர், பணியர், கோத்தர், தொதுவர் ஆகியோர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் வாழ்க்கை முறை குறித்த தனித்தனி அறைகளில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் படுக சமுதாய மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: கடல் போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை… 120 அடியை நெருங்கும் அணை நீர்மட்டம்… மேலும் இதன் வெளிப்புறத்தில் மரத்தினால் ஆன அலங்காரப்பொம்மைகள் இந்த இடத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. விவசாயக் கருவிகள், நீலகிரியில் கிடைத்த அரியவகைப் பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு சில பொருட்கள் சென்னை மற்றும் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து நீலகிரி பெருமையைக் குறிப்பிடும்விதமாக கொண்டு வந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் குறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் ஓ.அ.முருகவேல் கூறுகையில், “இந்த அரசு அருங்காட்சியகம் நீலகிரி மாவட்டத்தின் வரலாறு, பண்பாடு கலாச்சாரம் சார்ந்த பழமையான பொருட்களைச் சேகரித்துக் காட்சிப்படுத்தியுள்ளோம். ஸ்டோன் ஹவுஸ் என அழைக்கப்படும் இதன் உண்மை பெயர் கன்னிமாரா காட்டேஜ். இந்த பில்டிங் 1724இல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நீலகிரியின் பழமையான கட்டிடங்களில் இந்த கட்டிடம் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த கட்டிடம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 2017ஆம் ஆண்டு முதல் அரசு அருங்காட்சியகம் இந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பல்நோக்கு அருங்காட்சியகமான இங்கு கலைப் பொருட்கள் மற்றும் அறிவியல் பொருட்கள் உள்ளது. இந்த அருங்காட்சியகம் பள்ளி மாணவர்களுக்கும், வரலாறு படிக்கக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவிகரமாக உள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தளங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.