NILGIRIS

தேசத் தலைவர்கள் முதல் செலிபிரட்டி வரை ஒரே இடத்தில்... மெய்மறக்கச் செய்யும் மெழுகு உலகம்...

ஊட்டி மெழுகு மியூசியம் நீலகிரி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இதனால் நீலகிரிக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருடம் தோறும் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றிப் பார்ப்பதற்காக வருகை புரிவோர் பல்வேறு இயற்கை காட்சிகளையும், மலைகளையும், ஏரிகளையும், நீர்வீழ்ச்சிகளையும் மேலும் பல சுற்றுலாத் தலங்களையும் விரும்பி கண்டு ரசிக்கின்றனர். அந்தவகையில் இயற்கையான சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெழுகு உலகத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்த காட்சியகத்திற்கு நுழைவு கட்டணமாக ரூ.50 வசூல் செய்யப்படுகிறது. இந்த மெழுகு உலகத்தினுள் நுழைந்தவுடன் தேச தந்தை மகாத்மா காந்தி சிலை, இயேசு சிலுவையை தாங்கியது போல சிலையும், பிச்சைக்காரர் ஒருவர் படுத்திருப்பதை போல சிலையும், அன்னை தெரசாவின் சிலையும், அதன் அருகில் நோயாளி ஒருவர் படுத்திருப்பதைப் போல சிலையும், மோக்ச குண்டம் விஸ்வேஸ்வராய சிலையும், பழைய தொலைபேசி, கடிகாரம், காபி கப், மன்மோகன் சிங், ராணுவ வீரர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சிலையும் மெழுகினால் வடிவமைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: பல ப்ளேவர்களில் விற்பனையாகும் ஊட்டி ஹோம்மேட் சாக்லேட்… எப்படி தயாராகுது தெரியுமா..? மேலும், நடிகர் விக்ரமின் அந்நியன் பட உருவ சிலையும், சத்ரபதி சிவாஜி சிலையும், சாய்பாபா சிலையும், பகத்சிங், நேதாஜி, சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், பால் கங்காதர் திலக், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வீரப்பன் வன குடிசையில் அமர்ந்திருப்பதை போன்ற சிலையும், போதை பழக்கத்தால் ஏற்படுத்தும் பாதிப்பை உணர்த்தும் விதமான சிலையும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதை குறிக்கும் விதமான விழிப்புணர்வு சிலைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தோடர் பழங்குடி சமூகத்தினர் உருவ சிலையும், இசை வாசிப்பாளர்களின் சிலைகளும் மெழுகினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்த காட்சியகத்தில் ஹாரர் ஹவுஸ், வி.ஆர்.கேம்ஸ் என குழந்தைகளை ஈர்க்கும் அம்சங்களும் உள்ளது. இதனால் இந்த மெழுகு உலகத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவறாமல் விசிட் அடிக்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.