NILGIRIS

ஆங்கில அறிஞரின் நினைவாக ஊட்டியில் உள்ள பூங்கா... விளையாடக் காத்திருக்கும் குழந்தைகள்...

உதகை டேவிஸ் பூங்கா அடர்ந்த வனங்களுடன் பசுமையான விவசாய நிலங்களைக் கொண்ட நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் சுற்றுலாவிற்கு முக்கியமான மாவட்டமாகத் திகழ்கிறது. சீசன் சமயங்களில் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ளது. அதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பல பூங்காக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அப்படி அமைக்கப்பட்ட பூங்காக்களில் ஒன்று தான் இந்த டேவிஸ் பூங்கா. ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் சிஎஸ்ஐ சிஎம்எம் பள்ளியின் முன்புறமாக அமைந்துள்ளது இந்த டேவிஸ் பூங்கா. முன்பொரு காலத்தில் இயற்கையான அழகினைக் கொண்டிருந்த இந்த பூங்கா சில நாட்களுக்கு முன்பு கவனிப்பின்றி இருந்தது. இந்நிலையில் இப்போது இந்த பூங்காவினை ஊட்டி நகராட்சி புதுப்பித்து புதுப்பொலிவுடன் வழங்கியுள்ளது. இதையும் படிங்க: ஜூன் மாத ரேஷன் பொருட்கள் வாங்கலையா… கவலையை விடுங்க கார்டை எடுங்க - இந்த மாதம் சான்ஸ் இருக்கு… இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடும் விதமாகப் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தற்பொழுது இந்த பூங்கா பொதுமக்களுக்கு அனுமதி இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா திறக்கப்பட்டால் இப்பகுதியைச் சுற்றியுள்ள அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும், மகிழ்ச்சியாகப் பொழுது போக்க உதவும் என மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்த பூங்கா குறித்து புலவர் நீலமலை ஜேபி கூறுகையில், “டேவிஸ் பூங்கா டேவிஸ் துரை என்ற ஆங்கிலப் பேரறிஞரின் நினைவாகத் துவங்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பல வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது நகராட்சியின் மூலமாகப் புத்துயிர் பெற்றுள்ளது. முதலில் பிபிஐ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பூங்கா பின்னர் நகராட்சியின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. மேலும் இந்த பூங்காவில் இலக்கிய நிகழ்வுகள், கவியரங்குகள், பல தலைவர்களின் நினைவு நாளும் அனுசரிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பூட்டப்பட்டு இருந்து இந்த பூங்காவிற்கு விடிவு கிடைத்தது. புனரமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவினை விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்க வேண்டும். இந்த பூங்காவினைப் புனரமைத்ததற்கு அனைத்துத் தரப்பினருக்கும் ஊட்டி மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.