NILGIRIS

ஒரே புகைமூட்டமா இருக்கே... நீலகிரியில் பகலிலே ஹெட்லைட் போட்டுச் சென்ற வாகனங்கள்...

ஹெட்லைட் போட்டுச் சென்ற வாகனக்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் அதிகம் மழைப்பொழிவைப் பெறும் மாவட்டமாக உள்ளது. இங்கு நிலவும் இதமான காலச்சூழல் காரணமாகவும், மழைப்பொழிவு காரணமாகவும் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், அதிகம் விவசாயம் நடைபெறும் மாவட்டமாகவும் விளங்குகிறது. கால நிலை மாற்றத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சமீப காலங்களில் மழைப் பொழிவு என்பது சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இன்றைய தினம் காலை முதலே லேசான சாரல் மழை பொழிந்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக ஊட்டி - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்களுக்குத் தெரியாத அளவிற்கு வானமே இருண்டது போல் கார்மேகம் சூழ்ந்திருந்தது. கடும் மேகமூட்டத்தினால் வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்கினர். கடந்த இரண்டு தினங்களில் இரவு நேரங்களில் பொழியும் அதிக கனமழையால் நீலகிரி மக்கள் சற்றே பதற்றம் அடைந்துள்ளனர். இதையும் படிங்க: கயாவில் பித்ருக்கள் வழிபாடு… தென் மாவட்ட பயணிகளுக்காக நெல்லை - பாட்னா சிறப்பு ரயில்… ஊட்டி - கோத்தகிரி சாலையில் மழை இல்லாத காலகட்டங்களிலும் கூட மேகம் சூழ்ந்து இருக்கும். ஆனால் ஊட்டி - குன்னூர் சாலையில் கார்மேகம் சூழ்ந்து இருந்ததால் உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி வெளிப்பகுதியிலிருந்து சுற்றுலா வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சற்று சிரமத்தை எதிர் கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / ஒரே புகைமூட்டமா இருக்கே... நீலகிரியில் பகலிலே ஹெட்லைட் போட்டுச் சென்ற வாகனங்கள்... ஒரே புகைமூட்டமா இருக்கே... நீலகிரியில் பகலிலே ஹெட்லைட் போட்டுச் சென்ற வாகனங்கள்... ஹெட்லைட் போட்டுச் சென்ற வாகனக்கள் ஊட்டியை சூழ்ந்த கார்மேகக் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் பகலிலேயே முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி சென்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : August 17, 2024, 11:42 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் அதிகம் மழைப்பொழிவைப் பெறும் மாவட்டமாக உள்ளது. இங்கு நிலவும் இதமான காலச்சூழல் காரணமாகவும், மழைப்பொழிவு காரணமாகவும் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், அதிகம் விவசாயம் நடைபெறும் மாவட்டமாகவும் விளங்குகிறது. கால நிலை மாற்றத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சமீப காலங்களில் மழைப் பொழிவு என்பது சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இன்றைய தினம் காலை முதலே லேசான சாரல் மழை பொழிந்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விளம்பரம் குறிப்பாக ஊட்டி - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்களுக்குத் தெரியாத அளவிற்கு வானமே இருண்டது போல் கார்மேகம் சூழ்ந்திருந்தது. கடும் மேகமூட்டத்தினால் வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்கினர். கடந்த இரண்டு தினங்களில் இரவு நேரங்களில் பொழியும் அதிக கனமழையால் நீலகிரி மக்கள் சற்றே பதற்றம் அடைந்துள்ளனர். இதையும் படிங்க: கயாவில் பித்ருக்கள் வழிபாடு… தென் மாவட்ட பயணிகளுக்காக நெல்லை - பாட்னா சிறப்பு ரயில்… விளம்பரம் ஊட்டி - கோத்தகிரி சாலையில் மழை இல்லாத காலகட்டங்களிலும் கூட மேகம் சூழ்ந்து இருக்கும். ஆனால் ஊட்டி - குன்னூர் சாலையில் கார்மேகம் சூழ்ந்து இருந்ததால் உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி வெளிப்பகுதியிலிருந்து சுற்றுலா வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சற்று சிரமத்தை எதிர் கொண்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : August 17, 2024, 11:42 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.