NILGIRIS

மலைச்சாலைகளில் இனி மண் சரிவு பயமில்லை... நீலகிரியில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி...

புதிய தொழில்நுட்பம் தமிழகத்தில் சுற்றுலாவிற்கு முக்கியமான மாவட்டமான நீலகிரிக்குப் பிற மாவட்டத்திலிருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் நீலகிரியில் வாகனப் போக்குவரத்தும் அதிகமாக இருக்கிறது. நீலகிரிக்கு வரும் பெரும்பாலான பயணிகள் சாலை மார்க்கமாகத் தான் வருகின்றனர். மேலும் உள்ளூர் மக்களும் பிற தேவைகளுக்கு அருகில் சாலை மார்க்கமாகத் தான் சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் மலை மாவட்டமான நீலகிரியில் எதிர்பாராமல் ஏற்படும் மண் சரிவு சாலைப் போக்குவரத்து தடைப்படுவதற்கு பெரும் காரணமாக உள்ளது. மழைக்காலங்களில் இது போல் அதிகளவில் மண் சரிவு ஏற்படுவதுடன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுபோன்று நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளில் தடுப்புச் சுவர் மற்றும் மார்பு சுவர் அமைக்கப்படுகிறது. இருப்பினும் அதிக மழைக்காலங்களில் இதனால் முழுத் தீர்வு காண முடிவதில்லை. இதையும் படிங்க: Central Govt Job: 8,326 காலியிடங்கள்: பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்… எனவே, மண் உறுதிப்படுத்தல் மற்றும் மண்சரிவைத் தடுப்பதற்காக நவீனத் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுவது இன்றியமையாதது என அரசு உணர்ந்துள்ளது. அந்தவகையில் மண் சரிவினைத் தடுக்க நவீன முறையில் மண் ஆணி (soil nailing) பொறுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மண் ஆணி பொருத்தும் திட்டம் கோடப்பமந்து பகுதியில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் மண் ஆணி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் இந்தப் பகுதிகளை ஆய்வு செய்திருந்தார். இந்த மண் ஆணி பொருத்தி மண் சரிவைத் தடுக்கும் முறையில் முதலில் மண்ணின் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு, நனைந்த பின் அதன் மீது புல் வளர விதை தூவப்படுகிறது. பின்னர் அவை வளர்ந்த பின்னர் அதன் மீது வலை அமைப்பு அமைக்கப்பட்டு அதில் பெரிய அளவிலான ஆணிகள் அமைக்கப்படுகிறது. இதையும் படிங்க: கலைஞர் கனவு இல்லம் திட்டம்… பயனாளிகள் பட்டியல் குறித்த முக்கிய அறிவிப்பு… இவ்வாறான செயல்முறையில் புல் வளர்ந்து மண்ணுக்குள் வேர் நன்கு ஊடுருவி மண் உறுதி அடைகிறது. மேலும் இந்த பலமான ஆணிகளால் பொருத்தப்பட்டிருக்கும் வலை அமைப்பினால் மண் சரிவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்தத் தொழில்நுட்பம் நீலகிரியில் பல்வேறு முக்கிய சாலைகளிலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.