NILGIRIS

சாலை இல்லாத பகுதியிலும் சேவையாற்றும் செவிலியர்... டெல்லிக்கு அழைக்கப்பட்டுப் பாராட்டு...

நீலகிரி செவிலியர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு அரசு மருத்துவமனையில் கிராம சுகாதார செவிலியர் ஆக பணிபுரிந்து வருபவர் ஜமுனா. இவர் நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருமணத்திற்குப் பிறகு நர்சிங் பயின்று பணிக்குச் சேர்ந்தவர், இதற்கு முன்னர் கீழ் கோத்தகிரி பகுதியில் பல்வேறு பழங்குடி கிராமங்களில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது அரவேணு சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இருளர் பழங்குடி கிராமங்களில் இவருடைய பங்கு அளப்பரியதாக உள்ளது. பேருந்து வசதிகள் இல்லாத பழங்குடியினர் கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ளும் ஒற்றை அடி பாதையில் நடந்தே சென்று அங்குள்ள மக்களைப் பார்த்து வரும் இவரை அந்த பழங்குடி மக்கள் நம்ம நரசம்மா என உரிமையுடன் அழைக்கின்றனர். புதூர் பழங்குடி கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு தேயிலை தோட்டம் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் ஒற்றையடி பாதையில் நடந்து செல்லும் ஒரு இடமாக உள்ளது. அந்த இடங்களுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை சென்று மருத்துவ வசதி அளித்து வருகிறார் கிராம சுகாதார செவிலியர் ஜமுனா. இதையும் படிங்க: பெண் உரிமைக்காக நடந்த போராட்டம்… தங்கலான் சுட்டிக்காட்டும் வரலாற்று நிகழ்வு… இந்த பழங்குடி கிராமத்திற்கு செல்லும் பொழுது யானை கரடி காட்டு மாடு சிறுத்தை காட்டுப்பன்றி ஆகியவை நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாக இருப்பதால் மிகுந்த இன்னல்களுக்கு உட்பட்டு இந்த சேவை ஆற்றி வருகிறோம். உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் எந்த சலிப்பும் இல்லாமல் எங்கள் உயிரையும் பணயம் வைத்து பணிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என தெரிவிக்கின்றார். இதுவரையிலும் உள்ளூரிலே இருந்து எனக்கு டெல்லிக்கு விமானத்தில் அழைத்து சென்று செங்கோட்டையில் இடம் கொடுத்து டெல்லியை சுற்றிப் பார்க்க வைத்த இந்த நிகழ்வை எண்ணும் பொழுது ஒரு கனவாகவே உள்ளது. எவ்வளவு காசு பணம் சம்பாதித்தாலும் கிடைக்காத ஒரு ஆனந்தம் இந்த சிறப்பு அழைப்பாளர் அழைப்பை ஏற்று செல்லும் பொழுது அவ்வளவு மனமகிழ்ச்சியாக இருந்தது எனவும் பூரிப்புடன் தெரிவிக்கின்றார் ஜமுனா பழங்குடி கிராமங்களுக்கு செல்லும் பொழுது உபசரிப்பு மற்றும் வாழ்க்கை முறை குறித்து விவரிக்கும் பொழுது அவர்களுடன் ஒன்றி இணைந்தால் மட்டுமே நம்முடன் சகஜமாக பழகுகின்றனர். சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாக இங்கு வந்து செல்வதால் என்னிடம் அவர்கள் குறைகளை எளிதாக தெரிவிக்கின்றனர். இதையும் படிங்க: உணவுப்பிரியர்கள் விரும்பும் தூத்துக்குடி பொரிச்ச பரோட்டா… சுவைக்கான காரணம் தெரியுமா..? மேலும் ஒரு சில குறைபாடுகள் உள்ள கர்ப்பிணி பெண்களை அறிவுரைகள் வழங்கி மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்கிறோம். முன்னர் ஹோம் டெலிவரி நடந்து வந்த இந்த பகுதிகளில் தற்பொழுது அனைத்து பிரசவ பெண்மணிகளையும் மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வழி செய்து உள்ளோம் என தெரிவித்தார். எனது கணவர் இறந்து ஒரு வருட காலம் ஆயினும் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நாம் செய்யும் தொழிலை உண்மையுடனும் நேர்மையுடனும் செய்து வருவதால் நமக்கு கிடைக்கும் ஒரு அடையாளமாக இந்த அழைப்பை நான் எண்ணுகிறேன். இந்த விருதினை என் கணவருக்கு அர்ப்பணிக்கின்றேன் எனவும் உருக்கம் தெரிவித்தார். இனிவரும் காலங்களிலும் நான் செய்யும் கடமையை தவறாது தொடர்ந்து செய்து வருவேன் எனவும் தெரிவிக்கின்றார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.