NILGIRIS

உயிர் காக்கும் இரத்த தானம்... பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு...

பள்ளி மாணவர்களுக்கு இரத்த தான விழிப்புணர்வு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராதவிதமாக பல அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. மேலும் இயற்கை காரணங்களாலும் வாகன விபத்தினாலும் இயற்கை பேரிடர்களாலும் மற்றும் உடல்நலக்குறைவாலும் மனிதர்களுக்கு ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. ரத்த தானம் செய்பவர்களுக்கு மீண்டும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தானாகவே புதிய ரத்தம் சேர்ந்து விடுகிறது. பெரும்பான்மையான மருத்துவமனங்களில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியிலும், அறுவை சிகிச்சை பிரிவு பகுதிகளிலும் நோயாளிகளுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. இதையும் படிங்க: மலேசியா முருகனை ஊட்டியிலிருந்தே தரிசிக்கலாம்… எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி கோவில் தெரியுமா..? இரத்த தானத்தின் மகிமையை எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பலவகைகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஊட்டி அடுத்துள்ள கக்குச்சி அருகே உள்ள கிரி ஈஸ்வரா பள்ளி மாணவர்களுக்கு இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கூக்கல்தொரை பகுதியில் 26 ஆண்டுகளாக இயங்கி வரும் தேவமாதா நர்சிங் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, உடல் உறுப்புகள் செயல்படும் விதம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், உடலை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இதையும் படிங்க: ஏழைகளின் ஆப்பிளுக்கு இதுதான் சீசன்… ஊட்டியில் காய்த்து தொங்கும் பேரிக்காய்கள்… இது குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில், “ஆண்டுதோரும் ஜுன் 14ஆம் தேதி உலக ரத்த தானம் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை பருவத்திலிருந்தே இரத்ததானம், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / Blood Donation Awareness: உயிர் காக்கும் இரத்த தானம்... பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு... Blood Donation Awareness: உயிர் காக்கும் இரத்த தானம்... பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு... பள்ளி மாணவர்களுக்கு இரத்த தான விழிப்புணர்வு Blood Donation Awareness | ஊட்டியில் பள்ளி மாணவர்களுக்கு இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : June 18, 2024, 8:19 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராதவிதமாக பல அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. மேலும் இயற்கை காரணங்களாலும் வாகன விபத்தினாலும் இயற்கை பேரிடர்களாலும் மற்றும் உடல்நலக்குறைவாலும் மனிதர்களுக்கு ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. ரத்த தானம் செய்பவர்களுக்கு மீண்டும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தானாகவே புதிய ரத்தம் சேர்ந்து விடுகிறது. பெரும்பான்மையான மருத்துவமனங்களில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியிலும், அறுவை சிகிச்சை பிரிவு பகுதிகளிலும் நோயாளிகளுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. விளம்பரம் இதையும் படிங்க: மலேசியா முருகனை ஊட்டியிலிருந்தே தரிசிக்கலாம்… எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி கோவில் தெரியுமா..? இரத்த தானத்தின் மகிமையை எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பலவகைகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஊட்டி அடுத்துள்ள கக்குச்சி அருகே உள்ள கிரி ஈஸ்வரா பள்ளி மாணவர்களுக்கு இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கூக்கல்தொரை பகுதியில் 26 ஆண்டுகளாக இயங்கி வரும் தேவமாதா நர்சிங் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, உடல் உறுப்புகள் செயல்படும் விதம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. விளம்பரம் இந்த விழிப்புணர்வு முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், உடலை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இதையும் படிங்க: ஏழைகளின் ஆப்பிளுக்கு இதுதான் சீசன்… ஊட்டியில் காய்த்து தொங்கும் பேரிக்காய்கள்… இது குறித்து ஆசிரியை ஒருவர் கூறுகையில், “ஆண்டுதோரும் ஜுன் 14ஆம் தேதி உலக ரத்த தானம் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை பருவத்திலிருந்தே இரத்ததானம், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Blood Donation , Local News , Nilgiris , Ooty First Published : June 18, 2024, 8:19 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.