NILGIRIS

பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பலவகை பொருட்கள்.. பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த கண்காட்சி..

பழங்குடி மக்கள் தயாரிக்கும் பொருட்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மத்தியப் பழங்குடியின விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் பழங்குடி இன மக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. சிக்கிம், மத்திய பிரதேசம், அசாம், ஜார்கண்ட், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியின மக்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 26 அரங்குகளில் புதுவித ஆடைகள், பல விதமான ஆபரணங்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், தேன் வகைகள், வாசனைத் திரவியங்கள், கண்கவர் பொம்மைகள், தேயிலை தூள், சாக்லேட் போன்றவையும் உலோக வேலைப்பாடுகள், மூங்கிலால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையும் படிங்க: Jackfruit Season: யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிட கூடாது… மருத்துவர் சொல்வது என்ன..? இதைத் தவிரப் பழங்குடியினரின் பாரம்பரிய ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் கலந்து கொள்ளும் பழங்குடியின மக்களுக்குத் தங்குமிடம் மற்றும் பயணச் செலவுகள் மத்திய அமைச்சகத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் மூலமாக இது போன்ற கண்காட்சிகள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி மூலமாகப் பழங்குடியின மக்களின் பொருட்கள் நாடு முழுவதும் எடுத்துச் செல்வதற்கான வழி வகையாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர். இந்த கண்காட்சி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், இந்த கண்காட்சி குறித்து TRIFED ஒருங்கிணைப்பாளர் ரகு கூறுகையில், “பழங்குடியின மக்களது திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளி கொண்டு வருவதே எங்களின் நோக்கம். இந்தியா முழுவதும் 120க்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளது. ஓவியங்கள், ஆபரணங்கள், துணி வகைகள் மற்றும் இதர தனித்துவம் வாய்ந்த பல்வேறு பொருட்கள் உள்ளது. இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் செய்தி… மணிமுத்தாறு அருவி போக ரெடியா… தற்போது இவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக இது சிறந்த வழியாக இருக்கும். மொத்தமாக 24 பகுதிகளிலிருந்து பழங்குடியின மக்கள் வருகை புரிந்துள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து 7 பேர் வருகை புரிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலமாகச் சிறந்த முறையில் விற்பனை நடைபெறும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.